தமிழகம் முழுவதும் திமுக உறுப்பினர் சேர்கை முகாம் நடைபெற்று வருகிறது. இதில் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் இன்று தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி தலைமையில் புதிய உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வின்போது புதிய நிர்வாகிகளை பூத் கமிட்டி நிர்வாகிகளாக தேர்வு செய்ய வேண்டும் என கூறி இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், அந்தந்த பகுதி திமுக நிர்வாகிகள் ஏற்கனவே பொறுப்பில் இருந்தவர்களே பூத் கமிட்டி நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டு படிவங்களை பூர்த்தி செய்து அமைச்சர் பொன்முடி இடம் வழங்கி உள்ளனர்.
மேலும் படிக்க | பாஜக கூட்டணிக்கு அண்ணாமலை போடும் கணக்கு: வாய்ப்பில்லை என சொன்ன செல்லூர் ராஜூ
இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் பொன்முடி அந்த படிவத்தை தூக்கி அவர்களது முகத்திலேயே எரிந்து ஆவேசமாக பேசினார். திருக்கோவிலூர் சைலோம பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக நிர்வாகி வழங்கிய படிவத்தை எறிந்தார். அதேபோல், அரகணடநல்லூர் பேரூராட்சியில் திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. அங்கேயும் அமைச்சர் பொன்முடி திமுக நகர செயலாளர் முகத்திலேயே அவர் வழங்கிய படிவத்தினை எறிந்தார்.இதனால் நிர்வாகிகள் இடையேயும் பொதுமக்கள் இடையேயும் பரபரப்பு நிலவியது.
ஏற்கனவே இலவச பேருந்து விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் பொன்முடி, இப்போது சொந்தக் கட்சிகார்களிடமும் ஆவேசமாக நடந்து கொள்வது பேசு பொருளாகியுள்ளது. ஒரு அமைச்சராக இருப்பவர் பொதுவெளியில் வரும்போது அடிக்கடி கோபத்தை நேரடியாக நிர்வாகிகளிடம் மற்றும் பொது மக்களிடம் காட்டுவது சரிதானா? என்றும் பலர் வினவியுள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ