நாளை திமுக உயர்நிலை செயல்திட்ட கூட்டம் - அன்பழகன்

Last Updated : Feb 12, 2017, 03:13 PM IST
நாளை திமுக உயர்நிலை செயல்திட்ட கூட்டம் - அன்பழகன் title=

நாளை திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் வருகிற 13.2.2017 திங்கட்கிழமை(நாளை) மாலை 5 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக கழக அலுவலகத்தில் நடைபெறும். உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன் என அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

 

Trending News