தமிழக சட்டமன்றத் தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது திமுக

ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021-க்கான 173 வேட்பாளர்களின் பட்டியலை திராவிட முன்னேற்ற கழகம் (திமுக) வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 12, 2021, 02:38 PM IST
  • 173 வேட்பாளர்களின் பட்டியலை திராவிட முன்னேற்ற கழகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
  • மு.க.ஸ்டாலின் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவார்.
  • உதயநிதி ஸ்டாலின் சென்னையில் உள்ள சேப்பாக்-டிரிப்ளிகேன் பிரிவில் களமிறங்குவார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது திமுக title=

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021: ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021-க்கான 173 வேட்பாளர்களின் பட்டியலை திராவிட முன்னேற்ற கழகம் (திமுக) வெள்ளிக்கிழமை வெளியிட்டது. கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவார். ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் உள்ள சேப்பாக்-டிரிப்ளிகேன் பிரிவில் களமிறங்குவார்.

கட்சியின் மூத்த உறுப்பினர்களான துரை முருகன், கே என் நேரு, கே பொன்முடி மற்றும் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் பெரும்பாலான தற்போதைய எம்.எல்.ஏ.க்களை ஸ்டாலின் தக்க வைத்துக் கொண்டுள்ளார். திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய திமுக தலைவர், தங்க தமிழ்செல்வன், துணை முதல்வர் ஓ. பன்னீசெல்வத்தை எதிர்த்தும், டி.சம்பத்குமார் முதல்வர் கே.பழனிசாமியை எதிர்த்து எடப்பாடியிலும் போட்டியிடுவார்கள் என தெரிவித்தார்.

திமுக (DMK) பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்பாடியிலிருந்து போட்டியிடுவார். தான் மார்ச் 15 அன்று வேட்புமனுவைத் தாக்கல் செய்யப்போவதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார். தமிழகத்தில் இன்று முதல் வேட்பாளர்களின் வேட்புமனுத் தாக்கல் துவங்கியது.

ALSO READ: சட்டப்பேரவைத் தேர்தல் - 2021 பா.ம.க மூன்றாவது வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

2011 முதல் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் உள்ள திமுக, இம்முறை அதிமுக-வை தோற்கடித்து ஆட்சியை பிடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. மேலும் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, வி.சி.க மற்றும் பிற சிறிய அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு வானவில் கூட்டணியை திமுக இம்முறை கொண்டுள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அவர்களுக்கு திமுக 61 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.

மதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் திமுக-வின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்பதால், திமுக, 187 இடங்களில் களத்தில் இறங்கும் என்றே வைத்துக்கொள்ளலாம்.

திமுக முழு வேட்பாளர் பட்டியல் பின்வருமாறு:

Image

ImageImageImageImageImageImageImageImageImageImageImage

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News