நாலு கால்களும் இல்லாமல் பிறந்த ஆட்டுக்குட்டி; பாசத்துடன் பாலூட்டும் மூதாட்டி!

ஸ்ரீபெரும்புதூர் அருகே நாலு கால்களும் இல்லாமல்  பிறந்த ஆட்டுக்குட்டிக்கு பாசத்துடன் குழந்தை போல் பாலூட்டும் மூதாட்டியின் செய்கை அனைவரையும் நெகிழ செய்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 4, 2022, 07:01 PM IST
  • கால்நடை வளர்ப்பதை தொழிலாகக் கொண்டு தனது ஜீவ அம்சத்தை கடத்தி வரும் மூதாட்டி.
  • நான்கு கால்களும் இல்லாமல் பிறந்த ஆட்டுக் குட்டி.
  • ஆட்டுக்குட்டிக்கு பாசத்துடன் மடியிலிட்டு பால் ஊட்டிய காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்தது.
நாலு கால்களும் இல்லாமல் பிறந்த ஆட்டுக்குட்டி; பாசத்துடன் பாலூட்டும் மூதாட்டி! title=

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் சிவபுரம் ஊராட்சியில் வசிப்பவர் மூதாட்டி வசந்த மகாலிங்கம். இவரது கணவர் மற்றும் மகன்கள் இறந்த நிலையில் கால்நடை வளர்ப்பதை  தொழிலாகக் கொண்டு தனது ஜீவ அம்சத்தை கடத்தி வருகிறார். இந்த தள்ளாத வயதிலும் நேர்மையுடன் வாழ எண்ணி மூன்று ஆடுகளை வளர்த்து வந்த நிலையில் ஒரு ஆடு கடந்த சில மாதங்களுக்கு கருவூற்று இன்று அதிகாலை இரண்டு கன்றுகளை ஈன்றது. இதில் மகிழ்ச்சி அடைந்த மூதாட்டி வசந்த மகாலிங்கம் சற்று நேரத்திலேயே பெரும் அதிர்ச்சியை கண்டதும் கண் கலங்கினார்.

உடனடியாக அருகில் இருந்த நபர்கள் இது குறித்து விசாரித்த போது, ஆடு ஈன்ற போது ஒரு ஆட்டுக்குட்டி நல்ல ஆரோக்கியத்துடன் நடந்த நிலையில் மற்றொரு ஆட்டு குட்டி நான்கு கால்களும் இல்லாத மாற்றுத்திறனாளியாக பிறந்ததாக கூறி அழுதுள்ளார். மனிதநேயம் காப்பாற்ற முடியாத நிலையில் இந்த சிறிய ஆட்டுக்குட்டியை எவ்வாறு காப்பாற்றுவது என்ற நிலையை கூறி அவர்களிடம் அழுதுள்ளார்.

இருப்பினும், சிறிது நேரத்திலேயே தனது மனதை தேற்றிக்கொண்டு அருகில் உள்ள வீட்டில் இருந்து குழந்தைகளுக்கு அளிக்கும் பால் ஊட்டியை பெற்று அதில் தான் பசிக்கு வைத்திருந்த பாலை அந்த ஆட்டுக்குட்டிக்கு பாசத்துடன் மடியிலிட்டு வழங்கிய காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்தது.

மேலும் படிக்க | இராமேஸ்வரத்தில் பிரம்மாண்ட கொலு... 1000த்துக்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள்!

இது குறித்து மூதாட்டி வசந்தா கூறுகையில், அனைவரையும் இழந்து தனியாக வசிக்கும் இந்த நிலையில் இந்த கால்நடைகள் தனக்கு பெரிதும் பாசத்துடனும் தன்னுடைய இருந்த நிலையில், அதனுடைய பிரசவத்தில் இது போன்று நிகழ்ச்சி மனதை சிறிது நேரம் வருட செய்ததாகவும், மனிதனே மாற்றுத் திறனாளியாக இருக்கும் பொழுது கடும் சிரமங்களை சந்திக்கும் நிலையில், மனதை தேற்றிக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க | கோவையில் ஆயுத பூஜையை ஒட்டி விண்ணைத் தொடும் பூக்கள் விலைகள்!

மேலும், இந்த ஆட்டுக் குட்டியை தொடர்ந்து காப்பாற்றிவிடுவேன் எனவும், மேலும் தன்னுடைய வாழ்வாதாரத்திற்கு அரசு வழங்கும் இலவச கறவை மாடு திட்டத்தில் தனக்கு கறவை மாடுகள் வழங்கினால், எவ்வித தடையின்றி அனைத்தையும் தன்னுடைய உறவினர் போல் வளர்ப்பேன் என நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றார்.

மேலும் படிக்க |  சென்னை நெடுஞ்சாலையில் பறந்த ரூபாய் நோட்டுக்கள்; பரபரப்பாக அள்ளிய மக்கள் - கடைசியில் செம ட்வீஸ்ட்

மேலும் படிக்க |  100 கோடி சுருட்டப்பட்டுள்ளது... ஊழல் வெளிச்சம்தான் விடியலா?... அண்ணாமலை கேள்வி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News