Election Result 2021: எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி முன்னிலை!

தற்போது தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்த வரை 5,64,253 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. தற்போதைய நிலவரப்படி, தபால் வாக்குகள் எண்ணிக்கையில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Shiva Murugesan | Last Updated : May 2, 2021, 09:14 AM IST
Election Result 2021: எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி முன்னிலை! title=

TN Assembly Elections Result 2021: தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள், இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. கடுமையான கொரோனா வைரஸ் (COVID-19) கட்டுபாடுகளுக்கு மத்தியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மேலும் இறுதி முடிவுகள் மாலை 5 மணிக்குப் பிறகு வெளிவரத் தொடங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டை பொறுத்த வரை 75 வாக்கு எண்ணிக்கை மையங்களில் 234 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் பணியில் மொத்தம் 35,836 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை. 

தற்போது தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்த வரை 5,64,253 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. தற்போதைய நிலவரப்படி, தபால் வாக்குகள் எண்ணிக்கையில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. 

தமிழக முதல்வர் பழனிசாமி போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் முன்னிலை வகிக்கிறார். சுமார் 5 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றி முன்னிலை வகிக்கிறார்.

கோவில்பட்டியில் அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் முன்னிலை வகிக்கிறார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.

தமிழ்நாடு தேர்தல் முன்னணி நிலவரம்: 

திமுக கூட்டணி -38
அதிமுக கூட்டணி -31
அமமுக கூட்டணி -1

மேற்கு வங்கத் தேர்தல் முன்னணி நிலவரம்:

திரிணாமுல் காங்கிரஸ் -66
பாஜக -64
சிபிஎம் - 2
காங்கிரஸ் -3

தமிழ்நாடு மொத்த தொகுதிகள்: 234 
பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள்: 118

மேற்கு வங்காளம் மொத்த தொகுதிகள்: 294
பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள்: 148 

புதுச்சேரி மொத்த தொகுதிகள்: 30 
பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள்: 17

கேரளா மொத்த தொகுதிகள்: 140 
பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள்: 71 

அசாம் மொத்த தொகுதிகள்: 126
பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள்: 64

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News