சென்னை: மீட்பு ரயில் பெட்டியில் தீ விபத்து

Last Updated : Jul 27, 2017, 04:49 PM IST
சென்னை: மீட்பு ரயில் பெட்டியில் தீ விபத்து title=

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 10-வது நடைமேடையில் விபத்து கால மீட்பு பணிக்கு செல்லும் ரயிலின் ஒரு பெட்டியில் இன்று பிற்பகல் திடீரென தீப்பிடித்தது. 

இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, சிறிது நேரத்தில் தீயை கட்டுப்படுத்தினர். 

பின்னர், அந்த பெட்டியில் இருந்த பொருட்களை வெளியே எடுத்தனர். அந்த பெட்டியில் உள்ள பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன. 

மின்கம்பி அறுந்துவிழுந்ததால் ரயில் பெட்டியில் தீப்பிடித்திருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். 

Trending News