லட்சத்தீவு கடல்பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்....

வடகிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் தமிழகத்தின் சில இடங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு என இந்திய வானிலை மையம் அறிவிப்பு!

Last Updated : Jun 21, 2019, 11:13 AM IST
லட்சத்தீவு கடல்பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்....  title=

வடகிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் தமிழகத்தின் சில இடங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு என இந்திய வானிலை மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா மாநிலங்களிலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடக்கு, தெற்கு வங்கக்கடல், லட்சத்தீவு கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக சென்னையில் 196 நாட்களுக்கு பிறகு நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. இது வாகன ஓட்டிகளை மட்டுமின்றி மழைக்காக ஏங்கியிருந்த சென்னை வாசிகளையும் மகிழ்ச்சியடைய செய்தது.

இதே போல் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, அரியலூர் உள்ளிட்ட தமிழகத்தின் சில மாவட்டங்களிலும் மழை பெய்தது. அனல்காற்று வீசிவந்த நிலையில் தற்போது பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் இன்னும் 3 நாட்களுக்கு தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Trending News