கூட்டத்தில் பறந்த சேர்கள் - கார்த்தி சிதம்பரம் முன்னிலையில் மோதல் பரபரப்பு வீடியோ!

உள்ளாட்சி தேர்தல் பணி குறித்து சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் கார்த்தி சிதம்பரம் எம்பி முன்னிலையில்  ஒருவர் ஒருவரை தாக்கிக் கொண்டு ஏற்பட்ட அடிதடி மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 25, 2021, 06:00 PM IST
கூட்டத்தில் பறந்த சேர்கள் - கார்த்தி சிதம்பரம்  முன்னிலையில் மோதல் பரபரப்பு வீடியோ! title=

உள்ளாட்சி தேர்தல் பணி குறித்து சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் கார்த்தி சிதம்பரம் எம்பி முன்னிலையில்  ஒருவர் ஒருவரை தாக்கிக் கொண்டு ஏற்பட்ட அடிதடி மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் முன்னிலையில்,சிவகங்கை மாவட்டக் குழு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  அதன்படி, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் காரைக்குடி எம்.எல்.ஏ மாங்குடி, முன்னாள் எம்.எல்.ஏ கே.ஆர்.ராமசாமி மற்றும் தேவக்கோட்டை பகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

முன்னதாக இந்த கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு கிடைக்காத முன்னாள் நகர்மன்ற தலைவர் வேலுச்சாமி தரப்பினரும்,எம்பி கார்த்தி சிதம்பரம் ஆதரவாளர்களும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மேலும், காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் காரைக்குடி எம்.எல்.ஏ தனிச்சையாக செயல்படுவதாகவும், கட்சி ஆலோசனையை கேட்பதில்லை என்றும் குற்றம்சாட்டினார்.  ஒருகட்டத்தில், இந்த வாக்குவாதம் மோதலாக மாறி எம்பி கார்த்தி சிதம்பரம் முன்னிலையிலேயே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். நாற்காலிகளை தூக்கி வீசி தாக்கியதில் சிலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

 இதனிடையே,  முன்னாள் எம்.எல்.ஏ கே.ஆர்.ராமசாமி குறுக்கிட்டு நிர்வாகிகளை சமாதானம் செய்து கார்த்தி சிதம்பரத்தை பத்திரமாக அனுப்பி வைத்தார். இந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ASLO READ PMK on Medical Student Admission: தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கு 20% இடஒதுக்கீடு தேவை-பாமக

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News