அன்னிய செலாவணி மோசடி: தினகரன் மீதான வழக்கை விசாரிக்க தடை

Last Updated : Jul 7, 2017, 01:16 PM IST
அன்னிய செலாவணி மோசடி: தினகரன் மீதான வழக்கை விசாரிக்க தடை title=

குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த டிடிவி தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கை விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

முறைகேடாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாக கடந்த 1996-ம் ஆண்டு டிடிவி தினகரன் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கை அமலாக்கத் துறை தொடர்ந்தது. இந்த வழக்கை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் நடைபெற்று வந்தது. 

இந்நிலையில் இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும். எழும்பூர் நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என டிடிவி தினகரன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமைன்றம், டிடிவி.தினகரன் மீதான அன்னிய செலாவணி வழக்கை விசாரிக்க இடைகால தடை விதித்து உத்தரவிட்டார்.

டிடிவி.தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கை தொடரப்பட்டு ஏறக்குறைய 20 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News