யாழ்ப்பாணம் சிறையில் இருந்த 4 இந்திய மீனவர்கள் விடுதலை!

கடலோர எல்லைப் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 4 பேரை இலங்கை அரசு விடுவித்துள்ளது!

Updated: Feb 9, 2018, 08:09 PM IST
யாழ்ப்பாணம் சிறையில் இருந்த 4 இந்திய மீனவர்கள் விடுதலை!
File Photo

கடலோர எல்லைப் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 4 பேரை இலங்கை அரசு விடுவித்துள்ளது!

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர் ஜெயசீலன் (இலங்கையின் யாழ்ப்பாணம் சிறையில் இருந்தவர்), அவரது மகன் ஸ்டீபன் வலிப்பு நோயால் உயிரிழந்தார். 

இதனையடுத்து அவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக தந்தை ஜெயசீலனை விடுவிக்க வேண்டும் என இலங்கையிடம் இந்தியத் தூதரகம் கோரிக்கை வைத்தது.

இதையடுத்து ஜெயசீலன், சீனி இப்ராகிம் ஷா, முனியசாமி, பாலகுமார் ஆகிய நான்கு மீனவர்களையும் யாழ்ப்பாணம் சிறையில் இருந்து விடுதலை செய்து இலங்கை அரசு அறிவித்துள்ளது.

பின்னர் இவர்கள் நான்கு பேரும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர். 

வரும் சனிக்கிழமை(நாளை) இவர்கள் 4 பேரும் இராமேஸ்வரத்துக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் நல்லிணக்க அடிப்படையில் 109 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட உள்ளதாகவும், திங்கட்கிழமை அன்று அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது!