தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

Last Updated : Apr 12, 2017, 12:13 PM IST
தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் title=

அந்தமான் - இலங்கை இடையே ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது:- அந்தமான்-இலங்கை இடையே மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாற வாய்ப்புள்ளது. மேலடுக்கு சுழற்சி தமிழகத்தை நோக்கி வரும் பட்சத்தில் தமிழக தென் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வடக்கு நோக்கி மேலடுக்கு சுழற்சி நகர்வதால் மியான்மர், வங்கதேசத்திற்கு மழை வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் வெப்பக் காற்றால் தவித்து வருகின்றனர். இந்நிலையில் வங்கக்கடலில் காற்று மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதால், தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Trending News