கிசுகிசு : பம்பரக் கட்சி வாரிசுவின் துடுக்கு பேச்சு.. நோஸ்கட் செய்யும் சூரிய கட்சி ஜூனியர்கள்..!

Gossip, கிசுகிசு : பம்பரக் கட்சியின் வாரிசு துடுக்காக பேசுவதை கூட்டணியில் இருக்கும் சூரியக்கட்சி முக்கி தலைகள் சகித்துக் கொண்டிருக்கிறார்களாம். இவருக்கெல்லாம் நாம வேலை செய்ய வேண்டிய தலையெழுத்து என வெளிப்படையாகவே கிசுகிசுத்துக்கொள்கிறார்கள்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 22, 2024, 07:14 PM IST
  • பம்பரக் கட்சியின் வாரிசு துடுக்கான பேச்சு
  • கூட்டணியில் இருக்கும் சூரியக் கட்சியில் சலசலப்பு
  • கொஞ்சம் கூட மதிப்பதில்லை என நொந்துகொள்கிறாராம்
கிசுகிசு :  பம்பரக் கட்சி வாரிசுவின் துடுக்கு பேச்சு.. நோஸ்கட் செய்யும் சூரிய கட்சி ஜூனியர்கள்..! title=

Gossip News Tamil : சூடாக டீ போட்டுக் கொண்டிருந்த மாஸ்டர் அருகே சென்ற குசும்பன், ‘ அண்ணே நேத்து கதர் கட்சி மேட்டரு சொன்னேன் இல்ல, இன்னைக்கு கூட்டணியில் இருக்கும் இன்னொரு கட்சி மேல சூரிய கட்சி அதிருப்தியில் இருப்பதை சொல்றேன் கேட்டுக்கோங்க’ என்றதும், யாருப்பா அது? என மாஸ்டர் கேட்டார். ‘அதுதான்ணே, பம்பரமா சுழன்றவரோட கட்சி தான். அந்த கட்சி மேல யாருக்கும் அதிருப்தி இல்ல, அந்த கட்சிக்கு முகமாக களமிறங்கியிருக்கும் வாரிசு மேல தான் செம கடுப்புல இருக்காங்க சூரிய கட்சி தலைகள். ஜூனியர் முதல் சீனியர் வரை யாருக்குமே பம்பரக்கட்சி தலைவரோட வாரிசு நடவடிக்கை பிடிக்கலையாம். எந்தவொரு இடத்துல பேச்சை ஆரம்பிச்சாலும், அதாகப்பட்டது 1950ல இருந்து பாத்தீங்கணானு பேசுறாராம். தம்பி கொஞ்சம் சீக்கிரம் மேட்டருக்கு வாங்கனு சொன்னா, சிடுசிடுன்னு முகத்தை காட்டுறாராம்.

மேலும் படிக்க | கிசுகிசு : சூரிய கட்சியை சீண்டும் கதர் கட்சி தலைகள்...! உள்ளாட்சிக்கு கை கழுவ ரெடியாகும் தலைமை

எப்ப பாரு வீரவசனம், அப்பா புராணத்தை எல்லாம் கிடைக்கிற கேப்புல பாடிகிட்டே இருக்கிறாராம் அந்த பம்பரக்கட்சி வாரிசு. தேர்தல் அப்போவே, மலைக்கோட்டை சீனியருக்கும், இவருக்கும் இடையில கொஞ்சம் முறைச்சல் வந்துச்சு. எலெக்ஷ்ன்ற காரணத்துக்காக மலைக்கோட்டைக்காரர் அமைதியான போயிட்டாரு. அவரோட பேச்சு ரொம்ப துடுக்கா இருக்கு, கூட்டணிங்கிற ஒரே காரணத்துக்காக அதுவும் தலைவர் சொல்லிட்டாரேங்கிற காரணத்துக்காக தான் வேலை செஞ்சிருக்கோம். மத்தபடி ஓவரா பேசினா, நோஸ்கட் நிச்சயம் என மலைக்கோட்டை சீனியர் ஏற்கனவே தொண்டர்கள் முன்னால நேருக்கு நேரா கடிஞ்சிக்கிட்டாரு. அதுக்கப்புறமும் பெரிசா ஒன்னும் பம்பர வாரிச கண்டுக்கவில்லையாம்.

எங்க தயவுல ஜெயிச்சிட்டு, வீராப்பு பேச்சு வேறயா உங்களுக்கு?, கொஞ்சம்கூட கூட்டணி தயவுல தான் ஜெயிச்சோம்ங்கிற எண்ணமே இல்லாம, துடுக்கா பேசிகிட்டே இருக்கிறாரு பம்பர வாரிசு, இது சரிபட்டு வராதுன்னு தலைமையோட காதுகளுக்கும் இந்த விஷயத்தை எடுத்துட்டு போய்ட்டாங்களாம். கொஞ்சம் பொறுமையா இருங்க, எல்லாத்தையும் கோட்டை தேர்தலின்போது பாத்துக்கலாம்ங்கிற மெசேஜ் வந்துருக்காம். இது ஒருபுறம் இருக்க மலைக்கோட்டையில ஜெயிச்ச அவரு இப்போ ஊரு ஊறா நன்றி சொல்ல போய்ட்டு இருக்காரு. அப்போது ஒரு ரயில்வே புராஜெக்ட் பத்தி பேசுன பம்பர வாரிசு, ’நான் சீரும் சிறப்பாக குரல் கொடுத்து, இந்த திட்டத்தை உங்களுக்காக நிச்சயம் கொண்டு வருவேன், என்னால் இந்த திட்டம் உங்களுக்கு வந்தே தீரும் என உரத்த குரலில் பேசுனாரு.

அவரோட வீடியோவை பார்த்த கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சின்னவர் ஆதரவாளர் எம்.பி, அதைபத்தி நாங்க ஏற்கனவே பேசி, வேலையும் தொடங்கிருச்சி. நீங்க ஆணியே ..... வேணாம், வேற புதுசா ஏதாவது பண்ணுங்கனு வெளிப்படையாவே சொல்லி பம்பர வாரிசு மூக்கை உடைச்சுவிட்டுட்டாரு. பதில் கொடுக்கும்போது மரியாதைக்கூட பம்பர வாரிசு பேற பயன்படுத்தலைனா பாருங்க. இதையெல்லாம் பார்த்து தான் பம்பர வாரிசு கொதிச்சு போய் இருக்காரு. ஒரு கட்சியோட தலைவரோட பையன், தமிழினத்துக்காக உழைச்சவரோட பையன் என்ற மரியாதையே சூரியகட்சிக்காரங்க கொடுக்கமாட்டேங்குறாங்களே-னு தன்னோட சகாக்கள் கிட பொருமிக் கொண்டிருக்கிறாராம் அந்த பம்பர வாரிசு" என சொல்லிட்டு, போய்ட்டு வர்றேன் அண்ணா என கிளம்பினான் குசும்பன்.

மேலும் படிக்க | சென்னை மக்களே... 55 மின்சார ரயில்கள் நாளை முதல் ரத்து... பயப்பட வேண்டாம் - இதை படிங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News