சென்னை பயணிகளுக்கு நற்செய்தி... இனி கோயம்பேடு வரை ஆம்னி பஸ்கள் வரும் - முக்கிய அறிவிப்பு!

Kilambakkam Bus Stand: ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க வேண்டும் என்ற போக்குவரத்து துறையின் அறிவிப்பு குறித்து தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Jan 20, 2024, 06:43 PM IST
  • கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் சென்னையின் மையப் பகுதியில் உள்ளது - ஆம்னி சங்கம்
  • பொதுமக்கள் கிளாம்பாக்கம் வர 1300 முதல் ரூபாய் 1500 வரை செலவாகின்றது - ஆம்னி சங்கம்
  • கோயம்பேடுதான் பயணிகளுக்கு சுலபமாக வந்து செல்வதற்கு வசதியாக உள்ளது - ஆம்னி சங்கம்
சென்னை பயணிகளுக்கு நற்செய்தி... இனி கோயம்பேடு வரை ஆம்னி பஸ்கள் வரும் - முக்கிய அறிவிப்பு! title=

Kilambakkam Bus Stand: அரசு பேருந்து மற்றும் ஆம்னி பேருந்து மூலம் சென்னையில் இருந்து தங்களின் சொந்த ஊர் செல்வோருக்கும், சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்புவோருக்கும் பண்டிகை தினங்களில் மட்டுமின்றி அதிக விடுமுறை தினங்களிலும் கடும் பிரச்னை இருக்கும். இந்த புத்தாண்டில் இருந்து இந்த பிரச்னை டபுளாகிவிட்டது எனலாம். 

ஆம்னி பேருந்துகளும்... 

கோயம்பேட்டில் இருந்து தென்மாவட்டங்களுக்கு பேருந்து இயக்கப்படும் போது, புறநகர் பகுதிகளில் அதிக போக்குவரத்து நெரிச்சல், கூட்ட நெருக்கடி ஆகியவை ஏற்படுவதால் கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. புத்தாண்டு முதல் அங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட வேண்டும் என அரசு தரப்பில் கூறப்பட்டது.   

அதாவது, ஜனவரி 24ஆம் தேதி முதல் ஆம்னி பேருந்துகளை (Chennai Omni Bus) கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க வேண்டும் என்ற போக்குவரத்து துறையின் அறிவிப்பு குறித்து தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். 

மேலும் படிக்க | கிளாம்பாக்கத்திற்கு வரவே வேண்டாம்... மின்சார ரயிலில் சிட்டிக்குள் வர இந்த இடத்தில் இறங்கவும்!

அப்போது பேசிய நிர்வாகிகள்,"சென்னையில் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் மைய பகுதியாக அமைந்துள்ளதாலும் மெட்ரோ ரயில் நிலையம், புறநகர் ரயில் நிலையம், புறநகர் மற்றும் மாநகர பேருந்து சேவை மற்றும் ஷேர் ஆட்டோ போன்ற அனைத்து விதமான இணைப்பு வசதிகளும் உள்ளதாலும் அனைத்து பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் பயணிகளும் சுலபமாக வந்து செல்வதற்கு வசதியாக உள்ளது.

கிளாம்பாக்கத்திற்கு பொதுமக்கள் மற்றும் பயணிகள் வந்து செல்வதற்கு மெட்ரோ ரயில் நிலையம், புறநகர் ரயில் நிலையம், போதிய அளவு புறநகர் மற்றும் மாநகர பேருந்து சேவை போன்ற எந்தவிதமாக இணைப்பு  வசதிகளும் இல்லை என்பதால் பொதுமக்களும் பயணிகளும் பெரும் அவதிக்குள்ளாகின்றார்கள். 1000-க்கும் மேற்பட்ட எங்களது ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் நிறுத்தம்  செய்வதற்கான இடம் மற்றும் பேருந்துகளின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கான பணிமனையும் கிடையாது.

ரூ.1500 வரை செலவு

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குறிப்பிட்டுள்ள மெட்ரோ ரயில் நிலையம், புறநகர் ரயில் நிலையம், மாநகர மற்றும் புறநகர் பேருந்து சேவைகள் இவை அனைத்தும் வரும் வரை ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கோயம்பேடிலிருந்து புறப்பட்டு கிளாம்பாக்கம் பயணிகளை பேருந்து ஏற்றி தெரிவித்துக் கொள்கின்றோம். நிலையத்திற்குள்ளே சென்று செல்லும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம். 

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்வதற்கு பொதுமக்கள் மற்றும் பயணிகள் Ola, Uber Cab மற்றும் Auto-வை பயன்படுத்துவதற்கு ரூபாய் 1300 முதல் ரூபாய் 1500 வரை செலவாகின்றதால் பயணிகள் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். ஜிஎஸ்டி சாலைக்கு எதிரே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைந்துள்ளதால், ஜிஎஸ்டி சாலையின் குறுக்கே கடந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் செல்வதற்கு பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றார்கள்" என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | தமிழகத்தில் ஜன.22 விடுமுறை? - ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு எழும் கோரிக்கைகள்!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News