தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு - IMD

தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள்ளார்!!

Last Updated : Oct 20, 2019, 10:51 AM IST
தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு - IMD title=

தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள்ளார்!!

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் , திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், அரபிக்கடல் பகுதியில் 55 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும்  இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னையில் சில இடங்களில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இரண்டு மணி நேரத்திற்கும் மழை தொடரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

Trending News