பாலியல் தொல்லை, நகை கொள்ளை: வழக்கறிஞர் செய்யும் வேலையா இது?

18 வயது பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டு நகைகளை ஏமாற்றிய உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கைது.

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 3, 2021, 01:45 PM IST
பாலியல் தொல்லை, நகை கொள்ளை: வழக்கறிஞர் செய்யும் வேலையா இது?   title=

குடும்ப பிரச்சனை காரணமாக மன்னார்குடியில் இருந்து சென்னைக்கு வந்த இளம் பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி, அறையில் தங்க  வைத்து,  உல்லாசமாக இருந்து 5 சவரன் செயினை பெற்றுக் கொண்டு, போலி நகையை கொடுத்து ஏமாற்றிய சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார். 

புகார்தாரரான 37 வயது மதிக்க தக்க பெண் தனது குடும்பத்துடன் மன்னார்குடியில் உள்ள ரைஸ் மில்லில் வேலை செய்து கொண்டிருக்கிறார். அவர் அருகே உள்ள கிராமத்தில் வசித்து வருகிறார். 

அந்த பெண்மணி, தனது 18 வயது மகளுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு  உறவினரை திருமணம் முடித்து வைத்ததாகவும், கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தனது மகள் அவரது கணவனை பிரிந்து வசித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி அந்த பெண்மணியின் 18 வயதான மகள் பட்டுக்கோட்டையிலிருந்து புறப்பட்டு பேருந்து மூலம் சென்னை (Chennai) தேனாம்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருச்சியில் இருந்து உறவினர் வீட்டிற்கு வரும் போது பழக்கமான, பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரான 24 வயதான முத்துராஜ் என்பவருக்கு போன் செய்து தான் சென்னை வந்திருப்பதாக தெரிவித்துள்ளார். 

அப்போது வழக்கறிஞர் முத்துராஜ் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்து தன்னை சந்திக்குமாறு அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். அதன் படி அப்பெண்ணும் வரவே, இருவரும், சாலிகிராமம் காந்தி நகர், காவேரி தெருவில் உள்ள தனியார் லாஜ்ஜில் அறையெடுத்து தங்கி உடலுறவில் ஈடுபட்டதாகவும், அப்போது தனது கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்க செயினை பாலிஷ் போட்டு கொடுப்பதாக கூறி, முத்துராஜ் நைசாக பேசி பெற்றுக் கொண்டு வெளியே சென்றதாகவும் அப்பெண் கூறியுள்ளார்.

ALSO READ: சென்னை: பாலியல் வன்கொடுமை வழக்கில் அரசு மருத்துவர்கள் இருவர் கைது

இதைத் தொடர்ந்து 1 ஆம் தேதி மாலை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பெற்றுச் சென்ற செயினை போல வேறு ஒரு செயினை கொடுத்து, முத்துராஜ் அவரை ஊருக்கு அனுப்பியுள்ளார். ஊருக்கு சென்ற பாதிக்கப்பட்ட பெண் தனது தாயாரிடம் அந்த நகையை காண்பித்த போது, அது போலி நகை என தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் தங்க நகையை பெற்றுக் கொண்டு போலி நகையை கொடுத்து ஏமாற்றியது பற்றியும், தனது மகளை ஏமாற்றி அறையெடுத்து பாலியியல் உறவு வைத்துக்கொண்டது பற்றியும் கூறி, அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் கடந்த 2 ஆம் தேதி புகார் அளித்துள்ளார். 

அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். பாலியல் (Sexual Assault) தொடர்பான விவகாரம் என்பதால் இந்த புகாரை வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றினர். 

இது தொடர்பாக வடபழனி அனைத்து மகளிர் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் பெண் அளித்த புகார் உறுதியானது. 

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் என்பவரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் வயதை கணக்கில் கொண்டு கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் முத்துராஜ் மீது போக்சோ (POCSO) வழக்கு பதிய முடியுமா என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ: மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணவர் - மனைவி போலீசில் புகார்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News