சென்னை: கனமழை காரணமாக கள்ளக்குறிச்சி, வேலூர், நெல்லை, திருவாரூர், விழுப்புரம், கடலூர், மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர். அதேநேரத்தில் சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தீபாவளி வரை கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) சென்னை மண்டல மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில் கிடைத்த தகவலின்படி, தமிழ் மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த சனிக்கிழமை தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் மாநிலத்திலேயே அதிகபட்சமாக 18 செ.மீ மழை பெய்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று அளித்த அறிக்கையில் படி, "இலங்கை கடற்கரையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் சூறாவளி சுழற்சியை அடுத்து தென் தமிழகத்தில் மழை எதிர்பார்க்கப்படுகிறது என அறிவித்திருந்தது.
அதேபோல சென்னை வானிலை ஆய்வு மையத்தின் சார்பில், அக்டோபர் 31 முதல் நவம்பர் 02 ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், கன்னியாகுமரி, புதுச்சேரி, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என நேற்று அறிவித்திருந்தது.
அதேபோல இன்று காலை முதல் கள்ளக்குறிச்சி, வேலூர், நெல்லை, திருவாரூர், விழுப்புரம், கடலூர் என ஆறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR