Chennai Rain Weather Latest News Updates: சென்னை மதுரவாயல் எம்ஜிஆர் பல்கலைக்கழகம் அருகே அடையாளம் பட்டு கூவம் தரைப்பாலம் கமைழை காரணமாக முழுவதுமாக வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. அந்த வகையில், இன்று (டிச. 14) காலை 4 மணி அளவில் முகப்பேர் பகுதியைச் சேர்ந்த சுனில் வர்க்கீஸ் (54) என்ற நபர் தனது சொகுசு காரில் தரைபாலத்தில் கரை புரண்டோடும் ஓடும் வெள்ள நீரில் ஆபத்தை உணராமல், அதை கடக்கும் முயன்றுள்ளார்.
அப்போது கார் வெள்ளத்தின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டு தடுப்புகளில் இடிபட்டுச் சிக்கியது. இதனால், காரில் சிக்கி உயிருக்கு போராடிய சுனிலை மீட்கும் நடவடிக்கையில் மதுரவாயல் போலீசார் இறங்கினர். அவர்கள் ஜேசிபி உதவியுடன் கயிறு கட்டி காருடன் சேர்த்து வெளியே இழுத்து மீட்டனர்.
ஓட்டுநர் மீட்பு
முன்னதாக, கார் கண்ணாடியைய் உடைத்து போலீசார் வெள்ளத்தில் சிக்கிய சுனில் வர்கீஸை பத்திரமாக மீட்டுள்ளனர். தற்போது அந்த பரபரப்பு காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வைரலாகி வருகிறது. குறிப்பாக தரைப்பாலத்தில் இருபுறமும் போலீசார் கயிறு கட்டி பாதுகாப்பு தடவடிக்கை எடுத்த நிலையிலும், அதிகாலையில் சுனில் காருடன் இந்த தரை பாலத்தை தனது சொகுசு காரில் கடக்க நினைத்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் படிக்க | அரியலூர்: 8 மாத குழந்தை உட்பட 7 பேரை மீட்ட மீட்புப் படை
தென்மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றும் (டிச.14) மற்றும் நாளை (டிச.15) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்றும் இது மேற்கு- வட மேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 10 மணிவரை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர் மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமானது முதல் சற்றே கனமழை பதிவாகக் கூடும் என டெல்டா வெதர்மேன் என்றழைக்கப்படும் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
தொடர் கனமழை காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தேனி, சிவகங்கை, விழுப்புரம், திருச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக ஆறுகளில், நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ள நீர் புகுந்து பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க | பொங்கல் பரிசுத் தொகுப்பு : தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ