ஐஎன்எக்ஸ் வழக்கு: கார்த்திக் சிதம்பரத்திற்கு 5 நாள் சிபிஐ காவல்

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதான கார்த்தி சிதம்பரத்தை மார்ச் 6-ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு.

Last Updated : Mar 1, 2018, 07:28 PM IST
ஐஎன்எக்ஸ் வழக்கு: கார்த்திக் சிதம்பரத்திற்கு 5 நாள் சிபிஐ காவல் title=

18:49 01-03-2018
ஒரு நாள் காவல் விசாரணை முடிந்ததை அடுத்து இன்று மீண்டும் கார்த்தி சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மீண்டும் இன்று விசாரணை நடைபெற்றது. அப்பொழுது கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனக்கூறி, மேலும் 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அவகாசம் வழங்க வேண்டும் என சிபிஐ கோரிக்கை வைத்தது.

இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 


15:20 01-03-2018

கார்த்திக் சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது மார்ச் 7-ல் ஆணை பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் உத்தரவு

 


15:14 01-03-2018

ஒரு நாள் காவல் விசாரணை முடிந்ததை அடுத்து இன்று மீண்டும் கார்த்தி சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்பொழுது சிபிஐ வழக்கறிஞர் தரப்பில் கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை மேற்கொள்ள மேலும் 14 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என சிபிஐ கோரிக்கை வைத்துள்ளது. மேலும் விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை எனவும் குற்றம்சாற்றியது சிபிஐ.

 

அதேவேளையில் இன்று கார்த்தி சிதம்பரத்தை நீதிமன்ற வளாகத்தில் சந்தித்த ப. சிதம்பரம், தைரியமாக இருக்க வேண்டும் என தன் மகனிடம் கூறியுள்ளார்.


கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை மேற்கொள்ள மேலும் 14 நாட்களுக்கு காவலில் எடுத்து விசாரிக்க அவகாசம் வழங்க வேண்டும் என சிபிஐ கோரிக்கை வைத்துள்ளது.


கார்த்தி சிதம்பரம் 1 நாள் காவல் விசாரணை முடிந்ததை அடுத்து இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இன்று இந்தியா திரும்பியுள்ள முன்னால் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் மீதி மீதும் குற்றம்சாற்றப்பட்டு உள்ளதால், அவரிடமும் விசாரணை நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.

 

இந்திராணி மற்றும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோருக்குச் சொந்தமான நிறுவனம் ஐஎன்எக்ஸ் மீடியா. தற்போது ஷீனா போரா கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் இந்திராணி மற்றும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜி இருவரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 
இந்நிலையில் நேற்று அவர்களுடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டதில், தங்கள் நிறுவனத்துக்கு அந்நிய நேரடி முதலீடு பெற்றுத்தருவதற்காக கார்த்தி சிதம்பரம் பணம் பெற்றதாக இந்திராணி முகர்ஜி தெரிவித்துள்ளார். 


கார்த்தி சிதம்பரம் கைதான தகவலை அறிந்ததும் வெளிநாட்டில் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள ப. சிதம்பரம் தனது நிகழ்சிகளை ரத்து செய்துவிட்டு அவசரமாக இந்தியா திரும்புகிறார் என நேற்று தகவல் வெளியானது.

இதனையடுத்து, இன்று இந்தியா திரும்பினார் ப. சிதம்பரம். லண்டனில் இருந்து நேராக டெல்லி வந்தடைந்தார். இவர் மீதும் குற்றம்சாற்றப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வழக்கறிஞரிடம் இந்த வழக்கை குறித்து ஆலோசனை செய்து வருகிறார்.


கார்த்தி சிதம்பரத்தை 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ வழக்கறிஞர் கோரிக்கை வைத்த நிலையில், கார்த்தி சிதம்பரத்தை 1 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 


ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அந்நிய முதலீடுக்கான அனுமதி பெற்றுத்தர ரூ.10 லட்சம் முறைகேட்டிற்காக பரிமாற்றம் செய்ததாக கூறி முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு நடைபெற்று வந்த நிலையில், இன்று காலை சென்னை விமான நிலையத்தில் அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

 

பின்னர் அவர் டெல்லி அழைத்து செல்லப்பட்டார். அங்கு சிபிஐ அதிகாரிகள் அவரை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் முறையாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என சிபிஐ வழக்கறிஞர் குற்றச்சாற்று. அதற்கு பதில் அளித்த கார்த்தி சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர், எந்த ஒரு சம்மனும் அனுப்பவில்லை. சம்மன் அனுப்பாத போது ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று எப்படி கூற முடியும். ஒவ்வொரு முறையும் அனுமதி பெற்று தான் கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டிக்கு செல்கிறார் எனவும் கூறினார். கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய எந்தவித அடிப்படை முகாந்திரமும் இல்லை எனவும் கூறினார்.

மோடி அரசின் ஊழலை மறைக்கவே கார்த்தி சிதம்பரம் கைது -பிரியங்கா திரிவேதி

இதையடுத்து அவரது வழக்கறிஞர் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் கார்த்தி சிதம்பரத்தை 15 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ கோரிக்கை வைத்து உள்ளது.

 

தற்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள பா. சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் கைதான தகவலை அறிந்ததும் வெளிநாட்டில் இருந்து அவசரமாக இந்தியா திரும்புகிறார் என தகவல் வந்துள்ளது.

Trending News