இந்த வருடம் நடைபெற்ற ஜல்லிக்கட்டு சட்டவிரோதமாக கருதலாமா? கோர்ட்

தமிழகத்தில் அரசாணை வெளியிடாமல் இந்த வருடம் நடைபெற்ற ஜல்லிக்கட்டுகளை ‘சட்டவிரோதமாக கருதலாம்’என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.   

Last Updated : Jan 18, 2018, 05:11 PM IST
இந்த வருடம் நடைபெற்ற ஜல்லிக்கட்டு சட்டவிரோதமாக கருதலாமா? கோர்ட் title=

தமிழகத்தில் அரசாணை வெளியிடாமல் இந்த வருடம் நடைபெற்ற ஜல்லிக்கட்டுகளை ‘சட்டவிரோதமாக கருதலாம்’என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு நடத்த அனுமதிக்க கோரி தொடரப்பட்ட வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்திய மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதிகள்  ஜல்லிக்கட்டு அரசாணையில் 2017-ம் ஆண்டுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2018-ல் ஆண்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளை சட்டவிரோதமாக கருதலாம் என கருத்து தெரிவித்து உள்ளனர்.

மதுரையில் மூன்று இடங்களில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்கனவே அரசாணை பிறப்பித்து உள்ளது. மதுரை ஐகோர்ட்டில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது தொடர்பான அரசாணை இன்று விசாரணையின் போது தாக்கல் செய்யப்படவில்லை, அதனால் நீதிபதிகள் சட்டவிரோதம் என கருத்து தெரிவித்து உள்ளனர்.

மேலும், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு ஏன் தடை விதிக்க கூடாது எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், இந்த வழக்கின் தீர்ப்பு நாளை அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த ஸ்ரீவைகுண்டம், தாடிக்கொம்பு பகுதிகளில் தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக, மதுரை ஹைகோர்ட் கிளையில் நடைபெற்ற வழக்கில் நீதிபதி இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் அரசாணை விரைவில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த ஆண்டு சிவகங்கை மாவட்டம் சிராவயல், கண்டிப்பட்டி மற்றும் பெரம்பலூர் அரசலூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பாகவும் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது குறிபிடத்தக்கது.

Trending News