அதிமுக கூட்டணியில் டிடிவி, ஓபிஎஸ் இணைந்தால்... - ஜெயக்குமார் பளீச் பதில்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினக்கரன் அதிமுக கூட்டணிக்கு வந்தால் ஏற்பீர்களா என்ற கேள்விக்கு அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 3, 2023, 02:20 PM IST
  • அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ்
  • மறுப்பு சொல்லாத ஜெயக்குமார்
  • ஓ.பி.ரவீந்திரநாத் மீது நடவடிக்கை தேவை
அதிமுக கூட்டணியில் டிடிவி, ஓபிஎஸ் இணைந்தால்... - ஜெயக்குமார் பளீச் பதில்  title=

ஓபி ரவீந்திரநாத் மீது நடவடிக்கை

தீரன் சின்னமலை நினைவுநாளையொட்டி சென்னையில் இருக்கும் அவரது திருவுருவச் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமாரிடம் ஓபி ரவீந்திரநாத் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்திருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ஓ.பி.ரவீந்திரநாத் மீது பெண் ஒருவர் அளித்துள்ள புகாரில் உண்மை இருக்கும்பட்சத்தில் காவல்துறையினர் அந்த புகார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் என்பதால் பாரபட்சம் காட்டக் கூடாது என கூறினார். 

மேலும் படிக்க | டாஸ்மாக் திறக்கும் நேரம் மாற்றம்? - அமைச்சர் முத்துசாமி சொன்னது இதுதான்!

அதிமுக கூட்டணி

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு டிடிவி தினகரனின் அமமுக மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் வந்தால் இணைந்து செயல்படுவீர்களா?, இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளாரே என கேட்டனர். அந்த கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார், தமிழகத்தைப் பொறுத்தவரை கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்குவதாகவும், தேசிய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இருப்பதாக தெரிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் தேர்தல் நேரத்தில் இன்னும் சில கட்சிகள் இணைவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறிய அவர், நாடாளுமன்றத் தேர்தல் அல்லது சட்டமன்றத் தேர்தல் எது வந்தாலும் அதை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது என்றும் கூறினார்.

ஓ.பி.எஸ் மீது வழக்கு

மேலும், டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அதிமுக கூட்டணியில் இருப்பது குறித்து தேர்தல் நேரத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். திட்டவட்டமாக இல்லை என்று ஜெயக்குமார் கூறவில்லை.  தொடர்ந்து பேசிய அவர், அதிமுக கொடியை ஓபிஎஸ் அணியினர் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும் கூறியுள்ளார். 

மேலும் படிக்க | செந்தில் பாலாஜி ஆதாரவாளர் வீட்டில் சோதனை... அமலாக்கத்துறை அதிரடி - பின்னணி என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News