இரண்டு யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு யானை பலி!

கிருஷ்ணகிரியை அடுத்த பர்கூர் வனப்பகுதியில் இரண்டு யானைகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொன்டதில் ஒரு யானை பலியானது!

Last Updated : Feb 7, 2018, 07:11 PM IST
இரண்டு யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு யானை பலி! title=

ஈரோடு: கிருஷ்ணகிரியை அடுத்த பர்கூர் வனப்பகுதியில் இரண்டு யானைகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொன்டதில் ஒரு யானை பலியானது!

நேற்றைய தினம் வனப்பகுதிக்குள் இரண்டு யானைகளும் பலமாக ஒன்றுக்கொன்று தாக்கிக்கொண்டதாக உள்ளூர் பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதி அருகே மக்களால் செல்ல இயலவில்லை.

இதனையடுத்து இன்று காலை அப்பகுதியில் யானை ஒன்று சடமாக மீட்கப்பட்டுள்ளது. பலியான இந்த யானையானது நேற்றைய தாக்குதலில் இறந்த யானை தான் என மக்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.

உள்ளூர்வாசிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்பவயிடத்திற்கு விரைந்த வனத்துறையினர், பலியான யானையின் சடலத்தை மீட்டெடுத்தனர். 

இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் தெரிவிக்கையில், பலியான யானை பலமாக தாக்கப்பட்டு இருப்பதாகவும், யானையின் வயிற்றில் காயங்கள் தென்படுவதாகவும தெரிவித்துள்ளனர்.

Trending News