சட்டசபை முன்னவராக செங்கோட்டையன் நியமனம்

Last Updated: Friday, February 17, 2017 - 15:32
சட்டசபை முன்னவராக செங்கோட்டையன் நியமனம்
Zee Media Bureau

சென்னை: தமிழக சட்டசபையின் அவை முன்னவராக பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் அறிவித்துள்ளார்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சட்டசபை அவை முன்னவராக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இருந்தார். சசிகலா தரப்புடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ஓ. பன்னீர்செல்வம் அணி பிரிந்து செயல்படுகிறார். 

இந்நிலையில் சசிகலா தரப்பின் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை நாளை சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது. இதையொட்டி சட்டசபையின் அவை முன்னவராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.

comments powered by Disqus