சென்னை: அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் அரசியல் கட்சியான மக்கள் நீதி மய்யம் போதுமான வரவேற்பைப் பெற முடியவில்லை.
அரசியல் கட்சி தொடங்கிய பிறகு வந்த தமிழ்நாட்டின் முதல் சட்டமன்றத் தேர்தலில் கட்சிக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டது.
இதனையடுத்து மக்கள் நீதி மய்யத்தின் உயர்மட்ட தலைவர்கள் பெருமளவில் ராஜினாமா செய்துக் கொடிருக்கின்றனர்.
Also Read | Vaccine Tours: அமெரிக்காவுக்கு தடுப்பூசி சுற்றுலா போவதன் பின்னணி தெரியுமா?
கட்சியின் மத்திய நிர்வாகக் குழு (சிஜிபி) வியாழக்கிழமை மாலை சென்னையில் உள்ள அவர்களின் தலைமையகத்தில் சந்தித்த பிறகு இந்த தகவல்கள் வெளியாகின.
கட்சியின் மத்திய நிர்வாகக் குழுவின் உறுப்பினர்கள், தங்கள் பதவிகளில் இருந்து (கட்சியின் முதன்மை உறுப்பினரிடமிருந்து அல்ல) ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொண்டதாக ஜீ மீடியாவுக்கு தகவல்கள் கிடைத்தன. அதன்படி இந்த ராஜினாமாக்கள் தொடர்கின்றன.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கமலஹாசன், தேர்தல் தோல்விக்கான காரணத்தை அறிய முற்படுவதாகவும், கட்சியில் அடிப்படை மாற்றங்களை செய்ய விரும்புவதாகவும் தெரிவித்திருந்த்தார்.
Also Read | மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50000 கோடி
"அவர் ராஜினாமா கோரினார், நாங்கள் இணங்கினோம். இது தோல்வியின் காரணமாக இருப்பதாக நான் நினைக்கிறேன், மத்திய நிர்வாகக் குழுவில் யார் இருக்கவேண்டும் என்பதை பகுத்தாய்வது தலைவரின் முடிவு. அவர் ஒரு சிறிய வித்தியாசத்தில் தோற்றார், ஆனால் அவர் மக்களின் இதயங்களை வென்றார். அவர் போட்டியிடுவதற்குக் தேர்ந்தெடுத்த தொகுதி தவறானத் தேர்வு, அவர் சென்னையில் எந்த தொகுதியில் போட்டியிட்டிருந்தாலும் அவர் கைகளை வென்றிருப்பார்” என்று சி.ஜி.பி குமாரவேல் தெரிவித்தார். அவரும் சி.ஜி.பியிலிருந்து ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.
கூட்டம் முடிந்த சிறிது நேரத்திலேயே, மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதில், சிஜிபி உறுப்பினர்கள் டாக்டர் ஆர். மகேந்திரன், முருகானந்தம், மெளரியா, தங்கவேலு, உமதேவி, சி.கே.குமாரவேல், சேகர் மற்றும் சுரேஷ் ஐயர். ராஜினாமா செய்திருப்பதாக கூறப்பட்டது. எது எவ்வாறாயினும், இந்த ராஜினாமாக்களை ஏற்றுக்கொள்வது மற்றும் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பது குறித்து கமல்ஹாசனே முடிவு செய்வார் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Also Read | ஏழு குழந்தைகளை கருதரித்த பெண் பெற்றெடுத்தது 9 குழந்தைகளை!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR