கிறிஸ்தவ மதத்திற்கு கமல் குடும்பம் மாறிவிட்டது: H.ராஜா

கமல் குடும்பம் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளது என்று பாஜக தேசிய செயலாளர் H.ராஜா தெரிவித்துள்ளார்.

Last Updated : May 19, 2019, 11:16 AM IST
கிறிஸ்தவ மதத்திற்கு கமல் குடும்பம் மாறிவிட்டது: H.ராஜா title=

கமல் குடும்பம் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளது என்று பாஜக தேசிய செயலாளர் H.ராஜா தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று தினங்களுக்கு முன் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், முஸ்லிம்கள் நிறைய இருக்கும் பகுதி என்பதால் இதனை சொல்லவில்லை. காந்தி சிலைக்கு முன்னாள் சொன்னேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாத்ராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுபேரன். அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருக்கிறேன் எனக் கூறினார்.

கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக கமல் மீது அவரக்குறிச்சியில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தான் கூறியது சரித்திர உண்மை என தொடர்ந்து கமலும் கூறி வந்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து H.ராஜா கும்பகோணத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

கமல் மட்டுமின்றி அவரது குடும்பமே கிறிஸ்துவ மதத்திற்கு மாறியுள்ளது. நான் கிறிஸ்தவ மதத்தை பரப்பி வருகிறேன் என கமலே முன்பு ஒருமுறை கூறியுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Trending News