கருணாநிதி மத்திய அரசுக்கு அறிவுரை

மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கையை, ஏழை மக்கள், சிறுவணிகர் பாதிக்கப்படாத வகையில் செயல்படுத்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி தனது டிவிட்டார் பக்கத்தில் கூறியுள்ளார்.

Last Updated : Nov 9, 2016, 04:16 PM IST
கருணாநிதி மத்திய அரசுக்கு அறிவுரை title=

சென்னை: மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கையை, ஏழை மக்கள், சிறுவணிகர் பாதிக்கப்படாத வகையில் செயல்படுத்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி தனது டிவிட்டார் பக்கத்தில் கூறியுள்ளார்.

மத்திய அரசு நன்கு சிந்தனை செய்து, ஏழையெளிய நடுத்தர மக்களும், சிறு வணிகர்களும், இதன் காரணமாக பாதிக்கப்படாமல் தங்கள் வாழ்க்கையை எப்போதும் போல் நடத்திட உதவும் வழிவகையினைச் செய்திட வேண்டுமென்று கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் காரணமாக, நாட்டிலே உள்ள பெரிய செல்வந்தர்களுக்கு ஏற்படும் பாதிப்பை விட நடுத்தர மக்களும், ஏழையெளிய மக்களும், சிறு வணிகர்களும், ஆட்டோ ரிக்ஷா ஓட்டுபவர்களும் தங்களிடம் உள்ள 500 ரூபாய் நோட்டை வாங்குவதற்கு யாரும் முன்வராத நெருக்கடியான நிலையில், தெருக்களிலே அலை மோதுகின்ற அவலத்தைத் தான் இந்த அறிவிப்பின் காரணமாக காண முடிகிறது என கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

 

Trending News