தாம்பரம் மார்க்கெட் பகுதியில் (poorvika) செல்போன் கடை அருகில் இயங்கி கொண்டிருக்க கூடிய கடை தான் குட்டி பாஸ்ட்புட் & பிரியாணி உணவு கடை. இந்த கடை தாம்பரம் மார்க்கெட்டில் முக்கிய பகுதியில் இருப்பதால் ஏராளமான பொதுமக்கள் தினமும் மாலை நேரத்தில், துரித உணவுகளான சிக்கன் பிரைட் ரைஸ், சில்லி சிக்கன் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வாங்கி உண்பது வழக்கமாகி வருகிறது. தாம்பரம் மார்க்கெட்டிற்கு வரும் ஏராளமான பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுடன் இந்த கடையில் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர் இந்நிலையில் நேற்றிரவு 02/03/24 வாடிக்கையாளர் ஒருவர் சிக்கன் ப்ரைட் ரைஸ் பொட்டலத்தை நேரடியாக கடைக்கு சென்று வாங்கி உள்ளார்.
மேலும் படிக்க | தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியா? மக்கள் முடிவு செய்வார்கள் - திமுக அமைச்சர்!
பின்னர் வீட்டிற்கு வந்து தான் வாங்கிய உணவை திறந்து அவரும் அவர் குடும்பத்தாரும் சாப்பிட்டு கொண்டிருந்த போது,சாப்பிட தொடங்கிய சிறிது நேரத்தில் அந்த பிரைட் ரைஸில் பெரியளவு கருவண்டு ஒன்று இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து திரும்ப அந்த கடைக்கு நேரடியாக சென்ற வாடிக்கையாளர் கடையில் இருந்த பெண்உரிமையாளர் ஒருவரிடம் தான் வாங்கி கொண்டு சென்ற உணவில் வண்டு இருக்கும் புகைப்படத்தை காண்பித்து உரிய விளக்கம் கேட்டுள்ளார். நான் வாங்கிக் கொண்டு சென்ற உணவில் இந்த கருவண்டு இருந்தது இது எப்படி உணவில் வந்தது சுகாதாரம் இல்லாமல் எப்படி உணவை சமைத்து மக்களுக்கு கொடுக்கிறீர்கள் என்று சரமாரியான கேள்விகளை கேட்டுள்ளார்.
அப்போது அந்த கடையின் பெண் உரிமையாளர் வாடிக்கையாளரிடம் இது உங்கள் வீட்டில் இருந்து உணவில் விழுந்த வண்டு என்று வாடிக்கையாளரை அலட்சிய படுத்தி பேசியதாக கூறப்படுகிறது. சுகாதாரம் மற்றும் தரம் இல்லாமல் இருக்கும் இது போன்ற கடைங்களுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு தவறு இருக்கும் பட்சத்தில் அபராதம் விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பலரும் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க | சினிமாவை மிஞ்சிய கொலை சம்பவம் - வண்டலூர் திமுக ஒன்றிய குழு துணை தலைவர் படுகொலை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ