சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு ஒரு ஏமாற்று வேலை - காங்கிரஸ்!

மோடியின் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு மோடியின் ஏமாற்று வேலை என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு.  

Written by - RK Spark | Last Updated : Mar 8, 2024, 06:14 PM IST
  • முன்பு 480 ரூபாயாக சிலிண்டர் விலை இருந்தது.
  • தற்போது 1000 ரூபாயாக உள்ளது.
  • மத்திய அரசு மீது செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு.
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு ஒரு ஏமாற்று வேலை - காங்கிரஸ்! title=

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் முதல் முடிச்சூர் தாம்பரம் செல்லும் சாலை இரண்டு வழி சாலையாக இருந்தது. முதலமைச்சரின் சாலை விரிவாக்கத் திட்டத்தின் கீழ் ரூ 100 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் நான்கு வழிசாலியாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாலையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான துவக்க விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ரிப்பன் வெட்டி சாலையை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இதைத் தடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, தேர்தல் நெருங்கும்போது சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மோடி குறைப்பார், தேர்தல் முடிந்த பிறகு விலையை ஏற்றுவார். இது பிரதமரின் ஏமாற்று வேலை.

மேலும் படிக்க | உதயநிதி ஸ்டாலினை ஏமாற்றிய அதிகாரிகள்? அமைச்சருக்கே இந்த நிலைமையா?

480 ரூபாயாக இருந்த சிலிண்டரின் விலை தற்போது ஆயிரம் ரூபாய் வரை விலை ஏற்றமடைநது உச்சத்தை தொட்டுள்ளது. காங்கிரஸ் மன்மோகன் சிங் ஆட்சிக்கு பிறகு 480 ரூபாயாக இருந்த சிலிண்டரின் விலையை 200 ரூபாயாக நிர்ணயம் செய்வதாக மோடி அறிவித்திருந்தார். ஆனால் அதனை மோடி நிறைவேற்றவில்லை.  நடுத்தர மக்களை தேர்தலின் போது ஏமாற்றுவதற்காக 100 ரூபாயை குறைத்துள்ளார்.  மோடியின் இந்த ஜித்து விளையாட்டு எல்லாம் தமிழகத்தில் பலிக்காது. கடந்த பத்தாண்டு காலமாக ஒரு வாக்குறுதிகளையும் மோடி நிறைவேற்றவில்லை. மக்களுக்கான ஆட்சியும் இல்லை மக்களுக்கான பிரதமரும் இல்லையென குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவிக்கிறார். ஆனால் பரந்தூரில் விமான நிலையத்துக்கு எதிராக போராடி வரும் மக்களுக்கு எந்த ஒரு ஆதரவும் தெரிவிப்பதில்லை என எழுப்பிய கேள்விக்கு மோடி ஆட்சியில் தான் விமான நிலையம் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டது. விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக போராடிவரும் ஏகனாபுரம் மகாதேவி மங்கலம் உள்ளிட்ட 13 கிராம மக்களுக்கும் நான் எப்போதும் ஆதரவு தெரிவித்து, விமான நிலைய திட்டத்தை கைவிட வலியுறுத்தி வருகிறேன். விமான நிலைய திட்டத்தை அறிவித்தது பாஜக அரசு இத்திட்டத்தை பரிந்துரை செய்து அமுல்படுத்தியது அதிமுக அரசு என குற்றம் சாட்டினர்.

மேலும் படிக்க | எடப்பாடி பழனிச்சாமி ஓட்டுக்காக ஆள் வைத்து கொலை செய்தவர் - கோவை செல்வராஜ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News