Mattu Pongal Festival 2023 Live Updates: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையில் இன்று மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. தைப் பொங்கல் திருநாளான நேற்று உழவுக்கு மிக முக்கியமான சூரியனை அனைவரும் வணங்குவர். சூரியன் முன்னிலையில் பொங்கலிட்டு, காய்கறி, கிழங்கு வகைகளை சமைத்து படையலிட்டு விவசாயம் செழிக்க வேண்டிக்கொள்வார்கள்.
தொடர்ந்து, உழவுக்கு பேருதவியாக இருக்கும் மாடுகளை வணங்கும் திருநாள் தான் மாட்டு பொங்கல். இந்த பண்டிகையையொட்டி, வீடுகளில் உள்ள மாடுகளை நீராட வைத்து, கொம்புகளுக்கு வர்ணம் அடித்து, மாடுகள் முன் பொங்கலிட்டு அதனை வணங்குவார்கள். ஆண்டுதோறும் உழைப்பைக் கொட்டும் அந்த மாடுகளை போற்றும் வகையில், இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.
மேலும், பொங்கல் பண்டிகை முன்னிட்டு மதுரையில் பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது. நேற்று அவனியாபுரத்தில் சிறப்பான வகையில், ஜல்லிக்கட்டு போட்டி நடந்து முடிந்தது. உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நாளை நடைபெறுகிறது. மாட்டு பொங்கல் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு குறித்த உடனடி தகவல்களை இங்கு காணலாம்.