PM Modi Chennai Visit Live Updates: பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ள இன்று சென்னை வந்தடைந்தார். பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருவதற்கு முன்னதாக, ஹைதராபாத்தில் சுமார் ரூ. 11 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைத்தார். மதியம் 1.35 மணிக்கு பெகும்பேட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, விமானப்படை விமானம் மூலம் சென்னை வந்தார்.
சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடியை வர தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள், தமிழ்நாடு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்தையும், சென்னை - கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையைும் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
மேலும், சென்னை விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் 125ஆவது ஆண்டுவிழாவில், தமிழ் மொழியையும், தமிழ் கலாச்சாரத்தையும் தான் நேசிப்பதாக பிரதமர் மோடி உரையாற்றினார். மேலும், திருக்குறளை பிரதமர் மோடி மேற்கொள் காட்டி பேசினார். உரையின் முடிவில் வணக்கம் கூறி நிறைவு செய்தார். தொடர்ந்து, பல்லாவரத்தில் நடைபெற்ற நலத்திட்டங்கள் தொடக்க விழாவிலும் பங்கேற்று உரையாற்றினார்.
பிரமதர் மோடி சென்னை பயணம் குறித்த உடனடி தகவலுக்கு இந்த பக்கத்தில் இணைந்திருக்கவும்.