Tamil Nadu Assembly Session 2023 Live Updates : 2023ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. முதல் நாளான இன்று ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றுகிறார். தற்போது ஆளுநர் - 'தமிழ்நாடு' பெயர் சர்ச்சை போய்க்கொண்டிருக்கும் சூழலில் இந்த ஆளுநரின் உரை மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக, பாஜக போன்ற எதிர்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை அவையில் எழுப்ப காத்திருக்கும் என்பதால் இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஆண்டுதோறும் ஆளுநர் உரையுடன் துவங்குவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான சட்டசபை கூட்டம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் இன்று துவங்குகிறது.
ஆளுநர் உரை முடிந்தவுடன், அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு சட்டசபையில் வாசிப்பார். அதன்பிறகு சபாநாயகர் அப்பாவு சட்டசபை கூட்டத் தொடர் நடைபெறும் நாட்களை முடிவு செய்து அறிவிப்பார். இத்துடன் இன்றைய கூட்டத்தொடர் நிறைவுபெறும்.
அமைச்சரானதும் முதல்முறையாக சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்கிறார் உதயநிதி ஸ்டாலின்
ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை சில அரசியல் கட்சிகள் புறக்கணிக்குமா எனவும, மறுபுறம் வழக்கம் போல எடப்பாடி பழனிசாமி தரப்பினர், தங்களுடன் பன்னீர்செல்வம் தரப்பினரை அமர வைத்தது தவறு என்று கூறி, ஆளுநர் உரையை புறக்கணிக்குமா என்ற எதிர் பார்ப்பு எழுந்துள்ளது.