மக்களவைத் தேர்தல் 2019: PMK 2-வது வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!!

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாமக போட்டியிடவுள்ள 7 தொகுதிகளில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் குறித்து பாமக இரண்டாவது வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!!

Last Updated : Mar 18, 2019, 12:25 PM IST
மக்களவைத் தேர்தல் 2019: PMK 2-வது வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!! title=

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாமக போட்டியிடவுள்ள 7 தொகுதிகளில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் குறித்து பாமக இரண்டாவது வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!!

2019 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் 5 தொகுதிகளில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியலை இன்று காலை பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் அறிவிக்கப்படுவதாக பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்த நிலையில், தற்போது இரண்டாவது வேட்பாளர்கள் பட்டியளை வெளியிட்டுள்ளது. 

இது குறித்து அவர் வெளியிட்டுக்க அறிக்கையில், தமிழ்நாட்டில் வரும் 18.04.2019 அன்று நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில்,  அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில்  5 தொகுதிகளுக்கான பா.ம.க. வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். மீதமுள்ள இரு தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய இரண்டாவது பட்டியல் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள், இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் வெளியிடப் படுகிறது.

வேட்பாளர்கள் விவரம்:

1. திருப்பெரும்புதூர் - மருத்துவர் அ. வைத்திலிங்கம் M.S.(Ortho), PMK துணைத் தலைவர். 

2. திண்டுக்கல் - திரு. க. ஜோதி முத்து B.Sc., PMK துணைப் பொதுச்செயலாளர். 

 

Trending News