lok sabha election 2024 code of conduct rules: இந்தியாவின் லோக்சபா தேர்தல் 2024 தேதிகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்திருக்கின்றன. இந்திய தலைமை தேர்தல் ஆணையம், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை விதிகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
லோக்சபா தேர்தல் 2024 நடத்தை விதிகள்!
மத்திய, மாநில அரசுகளால் புதிய திட்டங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வர முடியாது. மத்திய மற்றும் மாநில அரசுகள் புதிய அறிவிப்புகளை வெளியிட முடியாது. அரசியல் கட்சியினர் மற்றும் தனிநபர்கள் அனுமதி பெறாமல் கட்சி கொடி, பேனர்களை வீடுகளுக்கு முன் வைக்க முடியாது. குழந்தைகளை தேர்தல் பணி, பரப்புரைகளில் பயன்படுத்தகூடாது. தேர்தலில் முடிந்த வரை வன்முறையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சில மாநிலங்களில் சில பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என தெரிவித்திருக்கும் தேர்தல் ஆணையம், தேர்தலில் பணம் பிரதான பொருளாக உள்ளது என்றும் கூறியுள்ளது.
உறுதி செய்யப்படாத, திசை திருப்பக் கூடிய விளம்பரங்களை அரசியல் கட்சிகள் வெளியிடக் கூடாது என கூறியுள்ள தேர்தல் ஆணையம், மதுபானம், பணம், பரிசுப் பொருட்கள், போதைப்பொருள் நடமாட்டம் தடுக்கப்படும் என உறுதி கொடுத்துள்ளது. தேர்தல் பணியில் அரசியல் கட்சிகள் 100% வெளிப்படை தன்மையை கடைபிடிக்க வேண்டும் என்றும், வங்கிகள் சூரியன் மறைந்ததற்கு பின்பு, அதாவது மாலை 6 மணிக்கு மேல் பணம் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்படுவதாகவும் கூறியுள்ளது.
வதந்தி பரப்பினால் கடும் தண்டனை
மேலும், தேர்தல் சமயத்தில் வதந்தி அல்லது பொய் செய்திகள் பரப்பவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்படும், தேர்தல் தொடர்பான போலி செய்திகளை நீக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது என்று தலைமை தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தனிப்பட்ட வாழ்க்கை, சாதி, மதத்தை வைத்து பரப்புரையில் ஈடுபடக்கூடாது. 50% வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவு இணையவழியில் நேரலை செய்யப்படும். தலைவர்களின் தனி விமானங்கள் அவர்களது வாகனங்கள் சோதனைக்கு உள்ளாக்கப்படும். மதுபான ஆலைகளின் உற்பத்தி மற்றும் விற்பனை கண்காணிக்கப்படும். லைசென்ஸ் பெற்று வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிகள் தேர்தல் முடியும் வரை ஒப்படைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு கட்டுப்பாடு
ஜாதி மத ரீதியான பிரச்சாரங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டாது, தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கருத்துக்கள் கூடாது, ஆன்லைன் பரிவர்த்தனைகள் முற்றிலும் கண்காணிக்கப்படும் என தெரிவித்திருக்கும் இந்திய தேர்தல் ஆணையம்நட்சத்திர பேச்சாளர்கள் நாகரிக முறையில் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் அதிக பணம் பறிமுதல்
கடந்த தேர்தலில் பண பறிமுதல் குறித்து தகவல் வெளியிட்டிருக்கும் இந்திய தேர்தல் ஆணையம், கடந்த 11 சட்டமன்றத் தேர்தல்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 3,400 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது என கூறியுள்ளது. அதிகபட்சமாக குஜராத் மாநிலத்தில் 802 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது என தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | 4 மாநில சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு தேதிகள் அறிவிப்பு - முழு விவரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ