இனி VIP வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் தனிவழி -HC

நீதிபதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் தனிவழி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...

Last Updated : Aug 30, 2018, 10:24 AM IST
இனி VIP வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் தனிவழி -HC title=

நீதிபதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் தனிவழி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...

சுங்கச்சாவடிகளில் அவசர வாகனங்களுக்கான தனி வழியில் நீதிபதிகள், முக்கிய பிரமுகர்களின் வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் உள்ள சுங்கசவாடிகளில் அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் நிலுவையிலிருக்கும் சுங்க கட்டணம் செலுத்துவது தொடர்பான வழக்கு,  நீதிபதிகள் ஹுலுவாடி ஜி.ரமேஷ், எம்.வி.முரளிதரன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுங்கச்சாவடிகளில் நீதிபதிகளின் வாகனங்கள் செல்லும்போது உரிய வழி இல்லை என்றும், வாகனங்களில் நீதிபதிகளுக்கான சின்னம் இருந்தும், ஓட்டுநர் அடையாள அட்டை காண்பித்தாலும் சுங்கச்சாவடி ஊழியர்கள் தரக்குறைவாக நடப்பதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், சுங்கசாவடிகளில் அவசர வாகனங்கள் செல்லும் வழிகளில், நீதிபதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என  இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

 

Trending News