சென்னை கிண்டியில் உள்ள எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் டாக்டர் சண்முகசுந்தரம் பெயரில் புதிய இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ள முதல் இருக்கை. இதில் பணியமர்த்தப்படும் பேராசிரியர் தற்போது இங்கிலாந்து நாட்டில் பணியாற்றி வருகிறார். இவர் ஆண்டுக்கு ஒரு முறை இணைப்பு கல்வி நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி வழங்குவார்.
இந்த இருக்கையை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு இன்று (அக். 10) துவக்கி வைத்தனர். இதனை தொடர்ந்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி,"ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு மருத்துவம் தொடர்பாக செயல்படும், இந்த இருக்கை சேலம் விநாயகா மிஷன் சார்பில் நிதியுதவியுடன் தொடங்கப்பட்டுள்ளது. புதிய கண்டுபிடிப்புகளை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
புதிய கண்டுபிடிப்புகளை புரிந்து கொண்டு அதனை ஏற்றுகொள்ள வேண்டும். தமிழ்நாடு மருத்துவ துறையில் ஏற்கனவே முதல் இடத்தில் உள்ளது. இதுபோன்ற புதிய துறைகளை உருவாக்கி மற்றவர்களுக்கு எடுத்து காட்டாக அமைய வேண்டும். 2047ஆம் ஆண்டு இந்தியா தன்னுடைய 100ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில் வளர்ச்சியடைந்த நாடாக இருக்க வேண்டும்.
மேலும் படிக்க | ஜூன் 9 கல்யாணம்.. அக். 9 குழந்தைகள்..! நயன் - விக்கி திடீர் பெற்றோர் ஆனது எப்படி?
தற்போது வரை நாம் வெளிநாடுகளில் இருந்து தொழில்நுட்ப கருவிகளை வாங்கி வருகிறோம். ஆண்டுக்கு ஏறத்தாழ 50 மில்லி சிப் மற்றும் semi conductors போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கி வந்தோம். வெளிநாடுகளில் இருந்து தொடர்ந்து பொருட்களை வாங்கி வந்தால் அது எதற்கும் உதவாது என்பதற்காகவே தற்போது 10 மில்லியன் டாலர்களை ஒதுக்கி அதனை இங்கேயே உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. மருத்துவ துறையில் தற்போது எப்படி தமிழகம் முன்னோக்கி இருக்கிறதோ அதே போல IOT துறையிலும் வளர்ச்சியடைய வேண்டும்" என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு என்பது இல்லை. இதுகுறித்து நாளை அனைத்து, மாவட்ட சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் எங்கு தட்டுப்பாடு என்று புகார் வந்தாலும் அதனை 104 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
மேலும், மருத்துவ பல்கலைக்கழக வரலாற்றில் இந்தியாவில் முதன்முறையாக ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு இருக்கை உருவாக்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவ பல்கலைகழகத்தின் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என கேட்டோம், ஆளுநர் எந்த முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என கேள்வி எழுப்பியிருந்தார். பல்கலைகழகம் தொடங்கும் நேரத்தில் எந்த முறை உள்ளதோ அவ்வாறே மாணவர் சேர்க்கை நடைபெறும் என பதில் அளித்துள்ளேன். எனவே ஒப்புதல் அளிப்பார் என நம்பிக்கை உள்ளது" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா ஆகியோரின் இரட்டை ஆண் குழந்தை குறித்த நேற்றைய அறிவிப்பு தொடர்பாக மருத்துவ ஊரக பணிகள் இயக்குநரகம் தரப்பில் விளக்கம் கேட்கப்படும். கருமுட்டை விவகாரம் தொடர்பாக தற்போதுதான் ஒரு வழிகாட்டுதல்கள் முறையாக வெளியிடப்பட்டுள்ளது. இதனால், இந்த ஜோடி கருமுட்டை செலுத்தி பெற்றார்களா எனவும் தெரியவில்லை. அதனால் விதிமுறைகளை மீறினார்களா என அதிகாரிகள் விசாரிக்க உத்தரவிட்டுள்ளோம்" என்றார்.
மேலும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் 18 யது சிறுவனுக்கு வழங்கிய சிகிச்சைக்கு பின் உயிரிழந்தார். இதுகுறித்து, "மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்களிடம் உரிய விளக்கம் கேட்கப்பட்டு வருகிறது. எங்கு தவறு நடந்திருந்தாலும் அதற்கு மன்னிப்பு
கோருகிறேன், வருந்துகிறேன். இனி இது போன்று நடக்காமல் மேலும் சிறப்பாக சிகிச்சையளிப்போம் என அமைச்சர் முன்பு உறுதியளித்தோம்" என கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை முதல்வர் சாந்திமலர் தெரிவித்தார்.
மேலும் படிக்க | இத்தனை பேர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளார்களா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ