விஜய் கொடுத்த சிக்னல்... உதயநிதி சொன்ன பதில் - அரசியல் விளையாட்டு ஆரம்பமா?

Udhaynidhi Stalin About Vijay: ஓட்டுக்குப் பணம் வாங்கக் கூடாது என்று நடிகர் விஜய் சொல்லியிருப்பது நல்ல விஷயம் தான் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

Written by - Sudharsan G | Last Updated : Jun 17, 2023, 04:55 PM IST
  • மொத்தம் விஜய் அந்த நிகழ்ச்சிக்கு மொத்தம் ரூ. 2 கோடி அளவில் செலவிட்டதாக தகவல்.
  • ஒவ்வொரு மாணவ மாணவிகளுக்கும் 5000 ரூபாய் காசோலை வழங்கி உள்ளனர்.
  • சுமார் 6000 பேருக்கும் மதியம் சாப்பாடு தாயாராகியுள்ளது.
விஜய் கொடுத்த சிக்னல்... உதயநிதி சொன்ன பதில் - அரசியல் விளையாட்டு ஆரம்பமா? title=

Udhaynidhi Stalin About Vijay: 10, 12ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு நடிகர் விஜய் சார்பில் உதவித்தொகை வழங்கி பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டது

சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் மண்படத்தில் நடந்த இவ்விழாவில் நடிகர் விஜய் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பரிசுகளை வழங்கினார். 12ஆம் வகுப்பில் 600க்கு 600 மதிப்பெண் எடுத்த திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸை பரிசாக வழங்கி நடிகர் விஜய் சிறப்பித்தார். 

234 தொகுதியில் இருந்து 1 தொகுதிக்கு 10ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 3 பேரும், 12ஆம் வகுப்பில் 3 மாணவர்களும் தேர்வு செய்யபட்டு மொத்தம் ஒரு தொகுதிக்கு 6 மாணவர்கள் இவ்விழாவில் அனுமதிக்கப்பட்டனர். 1 மாணவருக்கு அம்மா, அப்பா என இரண்டு பேருக்கு மட்டும் தான் அனுமதி தந்தனர். 

ஒவ்வொரு மாணவ மாணவிகளுக்கும் 5000 ரூபாய் காசோலை வழங்கி உள்ளனர். அதாவது, 1440 பேருக்கு தலா 5000 ரூபாய் வழங்கி உள்ளார்கள். இந்த பரிசத்தொகை மட்டும் ரூ. 72 லட்சமாகும். மண்டப வாடகை செலவு பெரிய ஹால் ரூ. 29 லட்சமும், மினி ஹாலுக்கு ரூ.19 லட்சமும் செலவாகியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 6000 பேருக்கு மதிய உணவு தயார் செய்யப்பட்ட நிலையில், அதற்கு 30 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பாண்டிச்சேரி ரவி கேட்டரிங் சர்விஸ் தான் 6000 பேருக்கு சமையல் செய்து கொடுத்துள்ளனர்.

மேலும் படிக்க | விஜய்யை அரசியலுக்கு அழைக்கும் எம்ஜிஆர் - போஸ்டரால் ஏற்பட்ட பரபரப்பு!

வாகன போக்குவரத்து செலவுகள், மாணவர்கள் உள்பட அவர்களோடு வந்தவர்களை தங்க வைத்த இடம் எல்லாம் சேர்த்து சுமார் 2 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளார்கள் என்று மக்கள் இயக்க முக்கிய நிர்வாகிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிகழ்வில் பேசிய விஜய்,"தனது வாழ்க்கை, கனவு அனைத்தும் நடிப்பும், சினிமாவும்" என கூறிவிட்டு அடுத்து எதையோ சொல்ல முற்பட்டார். ஆனால், அதை கூறாமல்,"அதைவிடுங்கள், அதை ஏன் இப்போது பேசிகிட்டு" என்றார். அதாவது, அவரின் அரசியல் வருகை குறித்த சமிக்ஞை தான் இது என்றும் ரசிகர்கள் ஆரவாரமாகினர். 

மேலும்,"தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மாணவ, மாணவிகளும் அவர்கள் பெற்றோரிடம் சென்று அப்பா, அம்மா இனிமேல் பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்காதீர்கள் என்று கூறிப்பாருங்கள். முயற்சி செய்து பாருங்கள்... நீங்கள் கூறினால் நடக்கும் என எனக்கு நம்பிக்கை உள்ளது. நீங்கள் தான் அடுத்தடுத்த ஆண்டுகளில் முதல் முறை வாக்காளர்களாக வர உள்ளீர்கள்" என்று விஜய் தெரிவித்தார்.  

மேலும் மாணவர்கள் அம்பேத்கர், பெரியார், காமராஜரை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றும், சமூக வலைதளங்களில் வரும் நல்ல விஷயங்களை எடுத்துக்கொண்டு மற்றதை விட்டுவிட வேண்டும் என்றும் மாணவர்களுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தினார். விஜய்யின் இந்த ஒட்டுமொத்த நிகழ்வு தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

அந்த வகையில், ஓட்டுக்குப் பணம் வாங்கக் கூடாது என்று நடிகர் விஜய் சொல்லியிருப்பது நல்ல விஷயம் தான் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், "நடிகர் விஜய் பேசிய நிகழ்ச்சியை நான் இன்னும் பார்க்கவில்லை. ஓட்டுக்குப் பணம் வாங்கக் கூடாது என்று அவர் சொல்லியிருப்பது நல்ல விஷயம் தான். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். இவர்கள் வரலாம், இவர்கள் வரக்கூடாது என்றெல்லாம் சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது" என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க | மாணவர்கள் மத்தியில் தனுஷின் அசுரன் பட வசனத்தை பேசிய விஜய்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News