ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைய தடை: ஐகோர்ட் அதிரடி!

மதுரை ஆதினங்களுக்கு உட்பட்ட கோவில்களுக்குள் செல்ல நித்தியானந்தாவுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Last Updated : Mar 5, 2018, 03:57 PM IST
ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைய தடை: ஐகோர்ட் அதிரடி! title=

மதுரை ஆதீன நிர்வாகத்துக்குட்பட்ட கோயில்களிலும் நித்யானந்தா நுழைய தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை ஆதீன மடாதிபதியாக நித்யானந்தா அறிவித்துக் கொண்டதை எதிர்த்து ஜெகதலப்பிரதாபன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த நீதிபதி மகாதேவன் இன்று பரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளார். 

அதன்படி, மதுரை ஆதினங்களுக்கு உட்பட்ட கோவில்களுக்குள் செல்ல நித்தியானந்தாவுக்கு சென்னை ஹைகோர்ட் மதுரை கிளை தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைய உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. மதுரை ஆதீன நிர்வாகத்துக்குட்பட்ட கோயில்களிலும் நித்யானந்தா நுழைய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், முறைகேட்டில் ஈடுபடும் மடாதிபதிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவும் ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. 

Trending News