தமிழகத்தில் பள்ளிகளுக்கு ஏப்ரல் 21 முதல் விடுமுறை

-

Last Updated : Apr 18, 2017, 05:11 PM IST
தமிழகத்தில் பள்ளிகளுக்கு ஏப்ரல் 21 முதல் விடுமுறை title=

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

 "தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு வருகின்ற 21-ம் தேதி முதல் விடுமுறை விடப்படும். அனல் காற்று வீசுவதால், பள்ளிகளுக்கு முன் கூட்டியே விடுமுறை அளிக்கப்படுகிறது. தொடக்கப்பள்ளி தேர்வுகளை, மாற்றியமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெற இருக்கும் தேர்வுகளுக்கு, மாற்று தேதி அறிவிக்கப்படும். குறிப்பாக, தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது. சிறப்பு வகுப்புகளை தனியார் பள்ளிகள் தவிர்க்க வேண்டும்" என்றார்.

Trending News