20 நாட்களில் ரூ.3.80 கோடியை தாண்டிய பழனி கோயில் காணிக்கை வரவு!

பழனி மலைக்கோயில் உண்டியல் கடந்த 20 நாட்களில் உண்டியல்கள் நிறைந்ததால் இரு நாட்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தர்களின் மொத்த காணிக்கை வரவு ரூ.3.80 கோடியை தாண்டியது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 7, 2023, 01:01 PM IST
  • உண்டியல்கள் மலைக்கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது.
  • பக்தர்கள் தங்கம் மற்றும் வெள்ளியாலான தாலி, கொலுசு, வேல், காவடி, மோதிரம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
20 நாட்களில் ரூ.3.80 கோடியை தாண்டிய பழனி கோயில் காணிக்கை வரவு! title=

பழனி மலைக்கோயில் உண்டியல் கடந்த 20 நாட்களில் உண்டியல்கள் நிறைந்ததால் இரு நாட்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தர்களின் மொத்த காணிக்கை வரவு ரூ.3.80 கோடியை தாண்டியது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் புத்தாண்டு மற்றும் தொடர் விடுமுறை காரணமாக வந்திருந்த பக்தர்கள் கூட்டம் காரணமாக 20 நாட்களில் நிறைந்தது.  

இதையடுத்து பழனி உண்டியல்கள் இரண்டு நாட்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது.  எண்ணிக்கையின் மொத்த தொகையாக ரொக்கம் மூன்று  கோடியே 80 இலட்சத்து 45 ஆயிரத்து 807 ரூபாய் கிடைத்துள்ளது.  

பக்தர்கள் தங்கம் மற்றும் வெள்ளியாலான தாலி, கொலுசு, வேல், காவடி, மோதிரம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். தங்கம் 855 கிராமும், வெள்ளி 10,631  கிராமும் ,வெளிநாட்டு கரன்சி 574  நோட்டுகளும் காணிக்கையாக கிடைத்துள்ளது. தவிர உண்டியலில் பித்தளை, செம்பு வேல்கள், ஏலக்காய், நவதானியங்கள், கைக்கடிகாரங்கள் உள்ளிட்டவையும் காணிக்கையாக கிடைத்துள்ளன.

மேலும் படிக்க | பழனியில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் போராட்டம்; பக்தர்கள் அவதி!

உண்டியல் எண்ணிக்கை முழுவதும் பல்வேறு சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. உண்டியல் எண்ணிக்கையின் போது பள்ளி, கல்லூரி மாணவிகள், வங்கி அதிகாரிகள், கோவில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் மலைக்கோவிலில் முருகனது  அறுபடை வீடுகளில் ஒன்றாகும். இது தமிழ்நாட்டில், மதுரையில் இருந்து 115 கிமீ மேற்கே உள்ள பழனியில் அமைந்துள்ளது. இங்குள்ள முருகனது சிலை போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய வருகின்றனர்‌‌.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News