எந்த நடிகர் அரசியலுக்கு வந்தாலும் எடுபடாது - ராமதாஸ் தாக்கு

எந்த நடிகர் அரசியலுக்கு வந்தாலும் எடுபடாது. அவர்களின் அரசியல் கனவு, வெறும் கனவாக தான் இருக்கும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Last Updated : Jan 11, 2018, 06:19 AM IST
எந்த நடிகர் அரசியலுக்கு வந்தாலும் எடுபடாது - ராமதாஸ் தாக்கு title=

நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வந்துவிட்டதாகவும், தனிகட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்றும், விரைவில் கட்சி மற்றும் சின்னம் தொடர்பான அறிவிப்பு வரும் எனவும் கூறினார். அதேபோல கமல்ஹாசன் தான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டதவும் தெரிவித்துள்ளார். 
மேலும் தற்போது தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

எந்த நடிகர் அரசியலுக்கு வந்தாலும் எடுபடாது. தற்போது மக்கள் தெளிவாக உள்ளனர். நடிகரின் அரசியலை மக்கள் ஏற்கமாட்டர்கள். மேலும் தற்போது எதிர்கட்சியாக உள்ள திமுக செயல்பாடு கேள்விக்குறியாக உள்ளது. எதிர்கட்சியாக என்ற முறையில் திமுக சரியாக செயல்படவில்லை. எங்களிடம் 90 எம்.எல்.ஏ-க்கள் இருந்தால், பாமக-வின் செயல்பாடு வேறு மாதிரியாக இருந்திருக்கும் எனவும் கூறினார்.

Trending News