பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இழப்பீடு - முதலமைச்சர் ஸ்டாலின் தொடக்கி வைப்பு

பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2.21 லட்சம் விவசாயிகளுக்கு 318 கோடி ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jan 10, 2023, 08:50 PM IST
  • பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்படுகிறது
  • முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்
  • 5 விவாயிகளுக்கு வழங்கினார்
பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இழப்பீடு - முதலமைச்சர் ஸ்டாலின் தொடக்கி வைப்பு title=

பயிர் காப்பீட்டுத் திட்டம் கடந்த 2016-2017ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2020-2021ஆம் ஆண்டிலிருந்து இத்திட்டத் திற்கான காப்பீட்டு கட்டண மானியத்தில் ஒன்றிய அரசு மானாவாரி மாவட்டங்களுக்கு 30 சதவீதம் வரையிலும், பாசன வசதி உள்ள மாவட்டங்களுக்கு 25 சதவீதம் வரை பங்களிப்பிலும், மாநில அரசின் 60 முதல் 65 சதவீத பங்களிப்பிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2021-2022ஆம் ஆண்டில் இத்திட்டம் 37 மாவட்டங்களை உள்ளடக்கிய 14 தொகுப்புகளில் இணை காப்பீட்டுத் திட்டமாக 80:20 விகிதத்தில் இடர் நிகழ்வுகளை ஏற்றுக்கொண்டு, மாநில அரசுடன் இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் மற்றும் இப்கோ டோக்கியோ பொது காப்பீட்டு நிறுவனம் இணைந்து செயல்படுத்தின. 

2021-2022-ம் ஆண்டு குளிர் பருவ (ரபி) பயிர்களுக்கான தமிழ்நாடு அரசின் காப்பீட்டு கட்டண மானியமாக 276.85 கோடி ரூபாய் காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு, இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் 152 கோடி ரூபாயும், இப்கோ டோக்கியோ பொது காப்பீட்டு நிறுவனம் 132 கோடி ரூபாயும், என மொத்தம் 284 கோடி ரூபாய் தற்போது இழப்பீட்டுத் தொகையாக சுமார் 2.02 லட்சம் விவசாயிகளுக்கு ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெய்த கனமழையால், மயிலாடுதுறை மாவட்டத்தில் 80,357 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா நெற்பயிர் பாதிப்படைந்தது. 2022-2023 ஆம் ஆண்டில், பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், அறிவிக்கை செய்யப்பட்ட 277 வருவாய் கிராமங்களுள், 87 வருவாய் கிராமங்களில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட பரப்பளவில், சுமார் ஒரு மாதம் வயதுடைய சம்பா நெற்பயிர் மழைநீரில் மூழ்கி பாதிப்படைந்தது. 

மேலும் படிக்க | குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்துங்கள் - சீமான் வலியுறுத்தல்

பயிர் காப்பீட்டுத் திட்ட விதிமுறைகளின்படி, 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட பரப்பளவில் பாதிப்பு ஏற்பட்ட 87 வருவாய் கிராமங்கள் விதைப்பு பொய்த்தல் இனத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீடு செய்த நடப்பு ஆண்டிலேயே இழப்பீட்டுத் தொகை வழங்கிட ஏதுவாக, 39,142 ஏக்கர் சம்பா நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.8,762 வீதம் சுமார் 19,282 விவசாயிகளுக்கு 34.30 கோடி ரூபாய் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி, இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட சுமார் 2.21 லட்சம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீட்டுத் தொகையாக மொத்தம் 318.30 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இப்பணியினை முதலமைச்சர் இன்று 5 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகைக்கான ஆணைகளை வழங்கி தொடங்கி வைத்தார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News