திண்டுக்கல்லில் குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் பெண் சிசு..!!

குப்பை தொட்டி ஒன்றில் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், குப்பை தொட்டி அருகே சென்று பார்த்தனர்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 23, 2022, 04:31 PM IST
  • குப்பை தொட்டி ஒன்றில் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது.
  • அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், குப்பை தொட்டி அருகே சென்று பார்த்தனர்.
  • திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி.
திண்டுக்கல்லில் குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் பெண் சிசு..!! title=

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம், மார்க்கம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நேற்றிரவு பொதுமக்கள் பேருந்துக்காக காத்துகொண்டு இருந்தனர். முழு ஊரடங்கு காரணமாக பயணிகளின் கூட்டம் அதிகளவில் இருந்தது.

அப்போது, அங்கிருந்த குப்பை தொட்டி ஒன்றில் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், குப்பை தொட்டி அருகே சென்று பார்த்தபோது, கட்டைப்பையில் துணியில் சுற்றியவாறு பச்சிளம் பெண் சிசு அழுதுகொண்டு இருந்தது.

கடுமையான குளிரில், ஈக்கள் மொய்க்கப்பட்டு தொப்புள் கொடி கூட வெட்டப்படாமல் குழந்தை இருந்துள்ளது. இதனால் குழந்தை பிறந்து 2 மணிநேரம் ஆகலாம் என தெரியவந்த நிலையில், இது குறித்து இடையகோட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ALSO READ | திரைப்பட பாணியில் புல்லட் திருட்டு; டெஸ்ட் டிரைவ் செய்த காதல் ஜோடிகள் மாயம்!

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் குழந்தையை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். மேலும், குழந்தையை யார் வீசி சென்றார்? தவறான உறவால் குழந்தை பிறந்ததா அல்லது காதல் வயப்பட்ட இளம்பெண்ணுக்கு பிறந்ததா என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒரு பாவமும் செய்யாத பச்சிளம் குழந்தை குப்பை தொட்டியில் வீசப்பட்ட சமப்வம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ALSO READ | திருப்பூர் அருகே தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News