கோவை: அலட்சியத்தால் உயிரே போய்விடும் என்பதை பலர் மறந்துவிடுகின்றனர். கோவையில் நடைபெற்ற சோக சம்பவம் அதை மீண்டும் நினைவுபடுத்துகிறது. செட்டிவீதி இந்த சம்பவம் உள்ள உப்புக்கார வீதியை சேர்ந்தவர் விஜயகுமார் நகை பட்டறை தொழிலாளி. இவருடைய மனைவி புண்ணியவதி.
விஜயகுமார் - புண்ணியவதி தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் உள்ளன. இந்தநிலையில் 4-வது முறையாக கர்ப்பமானதால் பிரசவம் தொடர்பாக அலட்சியப் போக்கே இருந்து வந்துள்ளது. புண்ணியவதையும் மனவருத்தத்துடன் இருந்ததாக தெரிகிறது.
நிறைமாத கர்ப்பிணியான அவர், பிரசவ வலி எடுத்ததும் மருத்துவமனைக்குச் செல்லாமல் , வீட்டில் வைத்து தனக்குத்தானே பிரசவம் பார்த்துக் கொண்டார். பிரசவத்தில் ஆண்குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தையின் (Children Health Alert) தொப்புள்கொடி சரியாக அறுபடவில்லை.
ALSO READ | கொரோனாவின் மூன்றாவது அலையில் எச்சரிக்கையாக இருப்பது எப்படி?
பிரசவமான சற்று நேரத்தில், குழந்தையும், தாயும் மயக்கமடைந்தனர். அதன்ப்பிறகுதான் தாயும் சேயும் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்லப்பட்டனர்.
தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட புண்ணியவதியும் குழந்தையும் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சரியாக பிரசவம் பார்க்காதால் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய பெரியகடை வீதி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, புண்ணியவதி மீது இந்திய தண்டனை சட்டம் 315- ( குழந்தை செத்துப்பிறக்க வேண்டும் அல்லது பிறந்த உடன் சாக வேண்டும் என்று செயல்படுவது) என்ற பிரிவின்படி வழக்குப்பதிவு செய்தார்.
ALSO READ | டெல்லியிலும் நுழைந்துவிட்டது ஒமிக்ரான்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR