ஆளுநரும், முதலமைச்சரும் அவரவர் வேலையை பாருங்கள் - பிரேமலதா அட்வைஸ்

ஆளுநரும் முதலமைச்சரும் அவரவர் வேலைகளை பார்த்தாலே போதும் இங்கு சர்ச்சைக்கு வேலை இருக்காது என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 16, 2022, 06:12 PM IST
  • ஆளுநருக்கும், முதலமைச்சருக்கும் பிரேமலதா அட்வைஸ்
  • ஆன்மீகவாதிகள் அரசியல் பேசக்கூடாது என்றும் கருத்து
ஆளுநரும், முதலமைச்சரும் அவரவர் வேலையை பாருங்கள் - பிரேமலதா அட்வைஸ் title=

சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு  கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்  செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர்,  “விஜயகாந்த் நலமாக உள்ளார். அவர் மாதந்தோறும்  மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு செல்வது  வழக்கம்தான். 

தேமுதிகவின் உட்கட்சி தேர்தல் இன்னும் ஒரு மாத காலத்தில் நடைபெறவிருக்கிறது. உட்கட்சி தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பாக இன்று மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

அதிமுக செய்த தவறுகளால்தான் இன்று அவர்கள் ஆட்சியை இழந்து வருந்துகிறார்கள். நாங்கள் சொன்னதை அவர்கள் சரியான நேரத்தில் செய்திருந்தால் ஆட்சியில் இருந்திருப்பார்கள். தேமுதிகதான் உண்மையான எதிர்க்கட்சியாக தற்போது செயல்பட்டுவருகிறது. 
 
தமிழகத்தில் நடந்த அனைத்து பிரச்னைக்கும் முதல் குரலாக தேமுதிக கொடுத்தது , மக்களுக்காக எங்களுடைய குரலை தைரியமாக கொடுத்திருக்கிறோம். இந்த அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அண்ணாமலை தெரிவித்திருக்கிறார் அதைப் பற்றி எனக்கு எந்த கருத்தும் கிடையாது யார் குற்றம் சாட்டுகிறார்களோ அவர்கள் அதை நிரூபிக்க வேண்டும். 

மேலும் படிக்க | ''அக்னிபாத்'' திட்டத்தை எதிர்த்து வடமாநிலங்களில் கலவரம் - ரயில்கள், பாஜக அலுவலகத்திற்கு தீ வைப்பு!

ஆன்மீகவாதி  அரசியல் பேசக்கூடாது. அரசியல்வாதி  ஆன்மீகம் பேசக்கூடாது. அவரவர் வேலையை அவரவர் செய்தாலே இந்த சர்ச்சைக்கு வேலை இருக்காது. 

ஆளுநர் அவரது வேலையை செய்தாலே போதும், முதலமைச்சர் அவரது வேலை செய்தாலே போதும். ஆளுநரை  குறை சொல்லி ஆட்சியாளர்களும், ஆட்சியாளர்களை குறை சொல்லி ஆளுநரும் மாறி மாறி குறை கூறிக் கொள்ளும் நிலைதான் தற்போது உருவாகியுள்ளது.

மகன் விஜய பிரபாகரனுக்கு கட்சிப் பொறுப்பை வழங்குவது குறித்து தலைவர் விஜயகாந்த் முடிவு எடுப்பார். இன்று மக்கள் வேலை இல்லாததால் குறுக்கு வழியில் சம்பாதிப்பதற்கு , ஆன்லைன் ரம்மி போன்ற தளங்களில் இளைஞர்கள் ஈடுபட்டு நஷ்டமடைந்து உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். 

ஆட்சிக்கு வந்தவுடனேயே நீட்டை  ஒழித்துவிடுவோம் என்று முதலமைச்சர் கூறினார் இப்போது அதைப் பற்றி கேட்டால் வாயை திறக்க மாட்டேங்கிறார்.” என்றார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News