தேர்ச்சி பெறாத மாணவ-மாணவிகளுக்காக நடத்தப்படும் துணைத் தேர்வுகள் ரத்து

செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் நடத்தப்படும் துணைத் தேர்வுகள் இனி நடத்தப்படாது என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 17, 2018, 01:41 PM IST
தேர்ச்சி பெறாத மாணவ-மாணவிகளுக்காக நடத்தப்படும் துணைத் தேர்வுகள் ரத்து title=

10 ஆம் வகுப்பு, ப்ளஸ் 1 மற்றும் ப்ளஸ் 2 வகுப்புக்கான பொது தேர்வுகளில் தோல்வியடைந்த மாணவர்களுக்காக வைக்கப்படும் செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் நடத்தப்படும் துணைத் தேர்வுகள் இனி நடத்தப்படாது என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் 10 ஆம் வகுப்பு, ப்ளஸ் 1 மற்றும் ப்ளஸ் 2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொது தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவ-மாணவிகள் அதே ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் நடத்தப்படும் துணைத் தேர்வுகள் பங்கேற்று தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெறலாம் என்ற முறை உள்ளது. இதன்மூலம் பல மாணவ-மாணவிகள் பயன் அடைந்து வந்தனர். 

தற்போது இந்த இடைநிலை, மேல்நிலை துணைத் தேர்வுகள் வரும் கல்வியாண்டு முதல் ரத்து செய்யப்படுவதாக கல்வித்துறை அறிவித்துள்ளது. பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவ-மாணவிகள் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் நடைபெறும் சிறப்பு தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறலாம் என கூறப்பட்டு உள்ளது.

Trending News