புதுவையில் கலைஞருக்கு வெண்கலச் சிலை - நாராயணசாமி!

கலைஞர் கருணாநிதிக்கு புதுச்சேரியில் வெண்கலச் சிலை வைக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 8, 2018, 12:40 PM IST
புதுவையில் கலைஞருக்கு வெண்கலச் சிலை - நாராயணசாமி! title=

கலைஞர் கருணாநிதிக்கு புதுச்சேரியில் வெண்கலச் சிலை வைக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த ஜூலை 27-ஆம் நாள் நள்ளிரவில் உடல்நிலை கோளாறு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 6.10 மணியளவில் கலைஞர் காலமானார். இதனையடுத்து மறைந்த தலைவர் கருணாநிதி அவர்களுக்கு தேசிய தலைவர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

5 முறை தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்த கலைஞர் அவர்கள் இந்திய அரசியல் தலைவர்களில் முக்கியமானவராக போற்றப்படுகின்றார். 

இந்நிலையில் மறைந்த தலைவர் கலைஞர் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் புதுவை அரசு அவருக்கு வெண்கல சிலை வைக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் காரைகாலில் அமையவுள்ள மேற்கு புறவழிச்சாலைக்கு கலைஞர் பெயர் சூட்டப்படும் என அறிவித்துள்ளார்.

முன்னாதக நேற்று கலைஞர் மறைவுக்கு அரசு பொது விடுமுறை அறிவித்து 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் புதுச்சேரி அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வின்போது செய்தியாளர்களிடம் பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்தாவது... "தலைவர் கலைஞர் அவர்கள் அனைத்து சமுதாய மக்களையும் அரவணைத்து சென்றவர். நான் பல முறை அவரை சந்தித்து உரையாடியிருக்கின்றேன் அப்போது பல நல்ல கருத்துக்களை, அறிவுரைகளை ஆட்சிக்கு வழங்கியுள்ளார். பொது வாழ்க்கைக்கு தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டவர். உலகில் எந்த மூலைக்கு சென்றாலும் தமிழர்களின் பாதுகாவலர் என்று பிரகடனப்படுத்தப்பட்டவர். அவரின் மறைவு எங்களுக்கு மன வருத்தம் அளிக்கின்றது. அவரது இழப்பு தமிழ் சமுதாயத்திற்கு மிகப்பெரிய இழப்பு, மறைந்த தலைவர் கருணாநிதியின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்" என குறிப்பிட்டார்.

Trending News