ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதியில்லை: முதல்வர் உறுதி!

மத்தியில் ஆளும் பாஜக அரசு தனது அரசைக் கலைத்தாலும் ஹைட்ரோ கார்பன் திட்டதிற்கு அனுமதி அளிக்கப்படாது என புதுவை முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Last Updated : Jun 5, 2019, 03:44 PM IST
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதியில்லை: முதல்வர் உறுதி! title=

மத்தியில் ஆளும் பாஜக அரசு தனது அரசைக் கலைத்தாலும் ஹைட்ரோ கார்பன் திட்டதிற்கு அனுமதி அளிக்கப்படாது என புதுவை முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் துவங்கி நாகப்பட்டினம் வரையிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் கீழ் தமிழகம், புதுச்சேரியில் 274 கிணறுகள் அமைக்கப்படவுள்ளன. இந்த கிணறுகள் ஒவ்வொன்றும் 3 ஆயிரத்து 500 மீட்டர் முதல் 4 ஆயிரத்து 500 மீட்டர் வரை ஆழம் கொண்டதாக இருக்கும்.

இத்திட்டத்திற்கு தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பிட்ட இந்த திட்டத்திற்கு விழுப்புரத்தில் கிணறு வெட்ட 139 சதுர கி.மீட்டர் பரப்புள்ள நிலம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

புதுச்சேரி பிராந்தியத்தில் அரியாங்குப்பம் முதல் பனித்திட்டு வரையிலான கடற்கரையை ஒட்டிய பகுதியில்தான் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக சுமார் 2 சதுர கி.மீட்டர் நிலம் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

இந்தநிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு புதுவை முதல்வர் நாராயணசாமி பேசுகையில், மத்திய அரசு அனுமதி அளித்தாலும், மாநில அரசின் அனுமதி இல்லாமல் எந்த பணியையும் செய்ய இயலாது.

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் தொழிற்சாலைகள், திட்டங்களுக்கு அரசு எந்நாளும் அனுமதி அளிக்காது என கொள்கை முடிவு எடுத்துள்ளோம். புதுச்சேரிக்கு தேவையான நல்ல திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு கொடுக்கும். மக்களின் எதிர்ப்பு கொண்ட எந்த திட்டங்களுக்கும் அரசு அனுமதி அளிக்காது என தெரிவித்தார்.

மேலும், புதுச்சேரியில் வேதாந்தா நிறுவனமோ அல்லது மத்திய அரசோ  ராணுவ பலத்துடன் வந்தாலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கப்போவதில்லை எனவும் உறுதி தெரிவித்துள்ளார்.

ஒருவேளை மத்திய அரது தனது அரசை கலைத்தாலும், மக்கள் நலனுக்காக முதல்வர் பதவியை தூக்கியெறிந்து மதச்சார்பற்ற அணியோடு இணைந்து ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Trending News