தமிழகம் & புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!!

தமிழகம் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!

Last Updated : Sep 7, 2019, 06:38 PM IST
தமிழகம் & புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!! title=

தமிழகம் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் வெப்பச்சலனம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி, நீலகிரி, திண்டுக்கல், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் தென்மேற்கு பருவகாற்று காரணமாக மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு திசையில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் இன்று முதல் 11ஆம் தேதி வரை தென்மேற்கு மற்றும் அரபிக் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் தேவாலா மற்றும் கோவை மாவட்டம் சின்னகல்லாறில் 5 சென்டி மீட்டர் மழையும், வால்பாறையில் 4 சென்டி மீட்டர் மழையும், வால்பாறை தாலுகா அலுவலகம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிபாறையில் 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

 

Trending News