வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..!

Last Updated : May 25, 2020, 01:25 PM IST
வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு! title=

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..!

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், தி.மலை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 19 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மதுரை, திருச்சி, கரூர், வேலூர், ராணிப்பேட்டை,  ஈரோட்டில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதாவது... அம்பன் புயல் வங்கதேசம் அருகே கரையை கடந்துவிட்ட நிலையில் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்துள்ளது, இதனால் மக்கள் மதிய வேளைகளில் வெளியே வருவதை தவிர்க்கவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ஆம், தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு. குறிப்பாக கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், தி.மலை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைபெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். 

மேலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வடமேற்கு வங்கக்கடல் மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே, இந்த பகுதிகளுக்கு, அடுத்த ஐந்து நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல மாவட்டங்களில், ஒரு வாரமாக வீசிய வெப்பக்காற்று, நேற்று முதல் குறைந்துள்ளது. பல இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை, 40 டிகிரி செல்ஷியசுக்கு கீழே சரிந்துள்ளது.சில இடங்களில் வழக்கமான கோடை வெயில் கொளுத்தியது. தமிழகத்தில் அதிகபட்சமாக, திருச்சியில், 43 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. வேலுார், 42; சேலம், மதுரை, 41; பாளையங்கோட்டை, 39; கோவை, 37; புதுச்சேரி, நாகை, 36 டிகிரி செல்ஷியஸாக வெயில் பதிவானது.

Trending News