சென்னை: திடீரென எதிர்பாராத வகையில் சென்னையில் இன்று (வியாழன்) கனமழை பெய்ததால், தலைநகர் ஸ்தம்பித்தது. சில மணி நேரங்களிலேயே பல பகுதிகளில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோல தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று பிற்பகல் முதல் பலத்த காற்றுடன் 13 சென்டிமீட்டர் அளவுக்கு கனமழை (Heavy Rainfall) பெய்யும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி, சென்னை முழுவதும் மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம், எம்ஆர்சி நகர், நந்தனம், மயிலாப்பூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் மழை பெய்தது.
சென்னையில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) பிராந்திய மையத்தின்படி, இன்று மாலை 6:15 மணி வரையில் MRC நகரில் அதிகபட்சமாக 176.5mm மழை பதிவாகியுள்ளது. மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் (Regional Meteorological Centre) தெரிவித்துள்ளது.
ALSO READ | TN Rain Update: மீண்டும் ஆரம்பம்; முக்கிய அப்டேட் தந்த வானிலை மையம்
அதேபோல சென்னைக்கு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ரெட் எச்சரிக்கை (Red Alert) விடுக்கப்பட்டு உள்ளது. அதாவது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என ஐஎம்டி கணித்துள்ளது. இந்த மழை இரண்டு மணி நேரம் தொடர்ந்து பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என வானிலை மையம் அறிவித்துள்ளது.
டிசம்பர் 31 வெள்ளிக்கிழமை கடலூர், விழுப்புரம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஜனவரி 1 சனிக்கிழமையன்று செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல தமிழகக் கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகக் கடலோர மாவட்டங்களில் நாளை மழை பெய்யக்கூடும்.
ALSO READ | TN Rain: 'இந்த’ மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் - வானிலை தகவல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR