ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: டிடிவி தினகரனுக்கு தொப்பிக்கு பதிலாக குக்கர் சின்னம்

டிடிவி தினகரனுக்கு எந்த சின்னம் கிடைக்கும் என எதிர்பார்க்கபட்ட நிலையில், அவருக்கு குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

Updated: Dec 7, 2017, 07:51 PM IST
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: டிடிவி தினகரனுக்கு தொப்பிக்கு பதிலாக குக்கர் சின்னம்
EC

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இன்று சின்னம் ஒதுக்கும் பணி தொடங்கியது. 

டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைக்குமா? என்று எதிர்பார்த்த நிலையில், தொப்பி சின்னம் பதிவு பெற்ற நமது கொங்கு முன்னேற்ற கழகம் மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுக்கு குலுக்கல் முறையில் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறியது.

அந்தவகையில், குலுக்கல் முறையில் வெற்றி பெற்ற நமது கொங்கு முன்னேற்றக்கழக வேட்பாளர் ரமேஷுக்கு தொப்பி சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.

டிடிவி தினகரனுக்கு எந்த சின்னம் கிடைக்கும் என எதிர்பார்க்கபட்ட நிலையில், அவருக்கு குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.